Top
undefined
Begin typing your search above and press return to search.

குழந்தையை முதுகில் சுமந்தபடி சொந்த ஊருக்கு சைக்கிளில் பயணிக்கிறாரா இந்த பெண்? ஊடரங்கில் பரவும் போலி செய்தி! இது நடந்தது வேறு நாட்டில்!

குழந்தையை முதுகில் சுமந்தபடி சொந்த ஊருக்கு சைக்கிளில் பயணிக்கிறாரா இந்த பெண்? ஊடரங்கில் பரவும் போலி செய்தி! இது நடந்தது வேறு நாட்டில்!

MuruganandhamBy : Muruganandham

  |  19 May 2020 12:11 PM GMT

நாட்டில் முழு அடைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து வதந்திகள், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்தி என அனைத்தும் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகிறது.

சமூக ஊடகங்களில் கொரோனா குறித்து தகவரான செய்திகளை பரப்பியதாக மகாராஷ்டிரா காவல்துறையின் சைபர் பிரிவு இதுவரை 366 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

சில சமூக விரோத சக்திகள் முழு அடைப்பின் போது டிக்டாக், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் தங்கள் பதிவுகள் மூலம் தவறான செய்திகளையும் வதந்திகளையும் பரப்பிய பின்னர் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக குழந்தையை தனது முதுகில் சுமந்தபடி பெண் ஒருவர் சொந்த ஊருக்கு சைக்கிளில் பயணிப்பதாக ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இது உண்மை இல்லை. இது பழைய போட்டோ மற்றும் இந்தியாவை சேர்ந்ததல்ல. பழைய போட்டோ, வீடியோக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று இந்திய அரசின் செய்தி வெளியீட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அது நேபாள நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். அதற்கான ஆதாரம் பின்வருமாறு காணலாம்.




Owners of fake news factory of India caught once more . Habitual offenders put in dust bin of history by Indian voters long back . Shameless . pic.twitter.com/As8Ekq9Wnh

இந்திய அரசின் செய்தி வெளியீட்டு பிரிவினால் உறுதி செய்யப்பட்ட தகவல்.





Next Story