Top
undefined
Begin typing your search above and press return to search.

#FactCheck போலி செய்திகளை பரப்பும் நியூஸ் 7 ஊடகவியலாளர் தேவேந்திரன்! #FakeNews

#FactCheck போலி செய்திகளை பரப்பும் நியூஸ் 7 ஊடகவியலாளர் தேவேந்திரன்! #FakeNews

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 9:35 AM GMT

நியூஸ் 7 செய்தி தொலைகாட்சியின் ஊடகவியலாளர் தேவந்திரன் பழனிசாமி. இவர் அடிக்கடி போலி செய்திகளை பரப்புவது வழக்கம். ஊடகவியலாளர் என்ற போர்வையில் இந்த போலி செய்திகளை பரப்புவது மட்டுமின்றி, தவறு என சுட்டிக்காட்டினால் கூட செய்திகளை திருத்த மாட்டார்.

அவர் இன்று "பீஹாரில் 263 கோடி ரூபாய் செலவில் 8 ஆண்டுகளாக கட்டப்பட்ட பாலம் ஒன்று திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இடிந்து விழுந்திருக்கிறது...

இதுக்கு கட்டினதா கணக்கும் மட்டும் காட்டியிருந்துருக்கலாம்... Face with cold sweat" என்று ட்வீட் ஒன்றை பதிவிட்டார்.

இது போலி செய்தி என்று பீகார் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ் தெளிவு படுத்தியுள்ளார்.

இதன் மூலம் புதியதாக கட்டப்பட்ட பாலத்திற்கு 2 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு பழைய 18 மீட்டர் சின்ன பாலம் தான் மழையில் அடித்து செல்லப்பட்டது என்பதும், 263 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என்பது தெளிவாகி இருந்தது.

இதை பலர் சுட்டிக்காட்டியும் தன் தவறை திருத்தவோ அழிக்கவோ இந்த ஊடகவியலாளர் முற்படவில்லை என்பதில் இவரது உள்நோக்கம் தற்போது வெளிச்சமாகி உள்ளது.

தமிழக பத்திர்க்கையாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு போலி செய்திகளை சமீப காலமாக பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story