Top
undefined
Begin typing your search above and press return to search.

அடக்கொடுமையே! ஸ்டாலின் வயலில் நடவு செய்வது போன்ற புகைப்படங்கள் கிராபிக்ஸ்சா.?

அடக்கொடுமையே! ஸ்டாலின் வயலில் நடவு செய்வது போன்ற புகைப்படங்கள் கிராபிக்ஸ்சா.?

MuruganandhamBy : Muruganandham

  |  14 March 2020 4:58 AM GMT

ஸ்டாலின் நடவு செய்வது போன்ற புகைப்படங்கள் கிராபிக்ஸ் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 39வது ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, முதல்வர் விவசாய நிலத்தில் நடவு நட்டதையடுத்து, ஸ்டாலின் நடவு செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலவுகிறதே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், அவையெல்லாம் கிராபிக்ஸ். இப்போது அவ்வாறு செய்வது சர்வ சதாரணம். சிவப்புக் கம்பளம் விரித்து, ஷூ அணிந்துகொண்டு ஸ்டாலின் நடவு நட்டதை நாமெல்லாம் பார்த்தோம் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் சொன்னதை உறுதி செய்யும் வகையில், அந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டது அல்ல என்பது தெரிய வந்துள்ளது. ஸ்டாலின் தற்போது வயலில் இறங்கியதாக கூறப்படும் பதிவு போலியானது என்பதை ஆதாரத்துடன் "பேஸ்புக்" நிறுவனத்துடன் இணைந்த உண்மை கண்டறியும் கண்டறிந்துள்ளது.

அதற்கான இணைப்பை இங்கே காணலாம்.

எடப்பாடி பழனிசாமியை பின்பற்றி மு.க.ஸ்டாலின் வயலில் நாற்று நடச் சென்றாரா?

https://tamil.factcrescendo.com/factcheck-mk-stalin-copied-tamil-nadu-cm-edappadi-palanisamy/

Next Story