Top
undefined
Begin typing your search above and press return to search.

அனைத்து அமைச்சகங்களையும் மூட உத்தரவா? ஊடகங்களில் பரவிவரும் தகவல் என்ன? உண்மை நிலை இதோ!

அனைத்து அமைச்சகங்களையும் மூட உத்தரவா? ஊடகங்களில் பரவிவரும் தகவல் என்ன? உண்மை நிலை இதோ!

MuruganandhamBy : Muruganandham

  |  24 April 2020 1:29 PM GMT

அனைத்து அமைச்சகங்களையும் மூடுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானதைப் போன்று, முகப்புப்படத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இதுபோன்று எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. செய்தித் தொலைக்காட்சி பொறுப்புடன் அதனை சரிசெய்து செய்தி வெளியிட்டது.


அதே போல தற்போதைய பொது முடக்கத்தின் காரணமாக, ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை குறைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவிவருகிறது. இந்த செய்தி பொய்யானது என்று உண்மை கண்டறியும் பிரிவு வலியுறுத்துகிறது. இதுபோன்ற சம்பளக் குறைப்பு குறித்த எந்த பரிசீலனையையும் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.





Next Story