Top
undefined
Begin typing your search above and press return to search.

வேண்டுமென்றே வெறுப்பை பரப்பும் சமூக ஊடகங்கள் - இந்தப்படம் அயோத்தி பூமி பூஜையின் போது எடுக்கப்பட்டதா.? உண்மை இது தான்!

வேண்டுமென்றே வெறுப்பை பரப்பும் சமூக ஊடகங்கள் - இந்தப்படம் அயோத்தி பூமி பூஜையின் போது எடுக்கப்பட்டதா.? உண்மை இது தான்!

MuruganandhamBy : Muruganandham

  |  11 Aug 2020 1:47 PM GMT

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் போது எடுக்கப்பட்டதாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதன் உண்மை தன்மை குறித்து அடுத்து பார்க்கலாம்.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வு, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித இவ்விழாவில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக 175 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஊரடங்கை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டோர் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படம் என்று கூறி, துறவிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவலையொட்டி ஊரடங்கு விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறும் வகையில் பல துறவிகள் பூமி பூஜையில் கலந்து கொண்டனர் எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

அதில் யாரும் மாஸ்க் அணியவில்லை என்பதை பார்த்தாலே, பழைய படம் என்பது தெளிவாக புரிந்துவிடும். இருந்தாலும் வெறுப்பை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் போலி செய்தியாக பதிவிடப்பட்டுள்ளது.

அந்த படம் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் போது எடுக்கப்படவில்லை என்பதோடு, அது 2013 கும்ப மேளா நிகழ்வின் போது எடுக்கப்பட்டது ஆகும். இதனை ஜெர்மனியை சேர்ந்த தோர்ஜ் பெர்ஜர் எனும் புகைப்பட கலைஞர் படம்பிடித்தார்.

அந்த வகையில் வைரலாகும் புகைப்படம் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டநிலையில், இன்னும் பலர் அப்புகைப்படத்தை பகிர்ந்து, இது தான் பூமி பூஜையின் போது கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவெளியா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டு வருவதை காண முடிகிறது.

Next Story