Top
undefined
Begin typing your search above and press return to search.

"பேச்சு வார்த்தைக்கான விருப்பம் இல்லை" - பாகிஸ்தானின் பொய்யை உடைத்த இந்தியா.!

பேச்சு வார்த்தைக்கான விருப்பம் இல்லை - பாகிஸ்தானின் பொய்யை உடைத்த இந்தியா.!

Saffron MomBy : Saffron Mom

  |  16 Oct 2020 2:24 AM GMT

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கூட்டாளி புதுடெல்லியில் சமீபத்தில், இந்தியா பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு செய்திகள் (messages) அனுப்பியதாகக் கூறிய கருத்துக்களை இந்தியா நிராகரித்தது. தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் வழங்கும் ஆதரவும், பாகிஸ்தான் தலைமையின் வெறுப்புப் பேச்சுகளும் சாதாரண உறவுகள் அமைய ஏற்ற சூழ்நிலைகளாக இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தேசிய பாதுகாப்பு மற்றும் சிறப்பு உதவியாளரான மொயது யூசுப் சமீபத்தில் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில், இந்தியா, பாகிஸ்தானுக்கு பேச்சு வார்த்தைக்கான விருப்பத்தை செய்திகளாக அனுப்பியதாக குறிப்பிட்டார். ஆனால் அதுகுறித்த விவரங்களை கொடுக்க மறுத்துவிட்டார். அவர் மேலும் கூறுகையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமானால், முன் நிபந்தனைகள் உண்டு என்றும் காஷ்மீரில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பது, காஷ்மீரிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது உள்ளிட்டவற்றை முன் நிபந்தனைகளாக தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, யூசபின் கூற்றுகளை நிராகரித்தார். அப்படி எந்த வித செய்தியும் தங்கள் தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் யூசப் கருத்து தெரிவிப்பது, அவர்களுடைய தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்பி, இந்தியாவை தலைப்புச் செய்திகளில் தினந்தோறும் இழுத்து, அவர்களுடைய மக்களை தவறாக வழி நடத்துதற்கான முயற்சி என்றும் தெரிவி த்தார்.


இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிபந்தனையாக, அதன் மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வந்திருக்கிறது. 2008 மும்பை தாக்குதல் பிறகு இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த அமைப்பு ரீதியான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 2015ல் ஒரு திடீர் பார்வையாளராக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது பாகிஸ்தான் சென்றிருந்தார்.

இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்துவதாக அந்த சமயத்தில் ஒப்புக்கொண்டாலும், ஜனவரி 2016 இல் நடந்த பதன்கோட் தாக்குதல் மறுபடியும் பேச்சுவார்த்தையை பின்னுக்கு தள்ளியது. பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து, ஆதரித்து, நடத்துவதாகவும் தூண்டப்படாத துப்பாக்கிச் சூடு நடத்தி தீவிரவாத ஊடுருவலுக்கு உதவி புரிவதாகவும் அனுராக் ஸ்ரீவஸ்தவா குற்றம் சாட்டினார்.

அனுராக் ஸ்ரீவஸ்தவா மேலும் கூறுகையில், யூசப் அறிவுரைகளை பாகிஸ்தானின் நிர்வாகத்திற்கு கொடுப்பதுடன் நிறுத்திக் கொள்ளும் படியும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். உண்மையான விஷயங்கள் அவர் கூறிய கருத்துக்கு மாறானவை என்று தெளிவாக கூறினார்.

Next Story