Top
undefined
Begin typing your search above and press return to search.

'சீனப் பகுதிக்குள்' இந்திய ராணுவம் நுழைந்து விட்டதாக சீனா புலம்பல் - இந்தியா வெளியேறுமாறு கோரிக்கை.!

சீனப் பகுதிக்குள் இந்திய ராணுவம் நுழைந்து விட்டதாக சீனா புலம்பல் - இந்தியா வெளியேறுமாறு கோரிக்கை.!

Saffron MomBy : Saffron Mom

  |  1 Sep 2020 11:47 AM GMT

சீன அரசின் ஊதுகுழல் ஊடகங்களான குளோபல் டைம்ஸ் மற்றும் CGTN ஆகியவை இந்திய இராணுவப் படையினர் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (LAC) கடந்து, சீனாவின் எல்லைக்குள் நுழைந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளன.

மக்கள் விடுதலை இராணுவம் (PLA) வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் செய்தித் தொடர்பாளர் நேற்று (ஆகஸ்ட் 31) இந்திய ஆயுதப்படைகள் சீனாவின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் கடந்து சென்றதாகக் கூறினார். சீன செய்தித் தொடர்பாளர் இந்தியா தனது படைகளைத் திரும்பப் பெறுமாறு "வலியுறுத்தியுள்ளார்".



இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக இந்திய ராணுவம் பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கு நதிக்கரையிலுள்ள ஒரு முக்கியமான உயரத்தை கைப்பற்றியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய ராணுவத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று ANI செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளின் படி, ஒரு சிறப்பு ஆப்பரேஷன் பட்டாலியன் அந்தப் பகுதியில் சமீபத்தில் சேர்க்கப்பட்டது. ஆகஸ்ட் 29-30 ஆம் தேதி இரவன்று இந்த பட்டாலியன் அந்தப் பகுதிக்கு சென்று அந்த உயரத்தை கைப்பற்றியது. அப்போது சீனப் படையினர் அதிலிருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் மட்டும்தான் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது

இந்தியத் தரப்பின் படி, அந்த உயரம் இந்தியாவின் LAC பக்கத்தில் இருக்கிறது. ஆனால் சீனர்கள் அதை தங்கள் பக்கம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். வட்டாரங்களின் படி கமாண்டர் மட்டத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் அதற்கு எந்த சாதகமான விளைவும் ஏற்படவில்லை. சீன ராணுவ மேற்குப்பகுதி கமாண்டர் முன்னதாக கூறுகையில் இந்தியா பல மட்ட பேச்சு வார்த்தைகளில் நடந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியா LAC எல்லையைத் தாண்டி சீனாவை தூண்டி விடுவதாக, சீன அரசாங்கத்தின் ஊதுகுழலான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இதற்கு முன்னதாக கூறுகையில், ஆகஸ்ட் 29-30 ஆம் தேதி அன்று இரவு சீன படையினர் தூண்டிவிடக்கூடிய ராணுவ நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்ததாகவும், இதற்காக இந்திய ராணுவம் தன்னுடைய நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தற்போதிருக்கும் நிலைமையை மாற்ற முயற்சிக்கும் சீனாவின் அனைத்து முயற்சிகளையும் தடுக்க ஆயத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக இரண்டு புறமும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதற்கு சாதகமான விளைவுகள் வரவில்லை. சீன ராணுவம் பிங்கர் ஏரியாவில் இருந்து வெளியேற முற்றிலுமாக மறுத்துவிட்ட நிலையில் அதற்காக நேரத்தை வாங்குவது போல் தெரிகிறது. இந்தியாவும் கிழக்கு லடாக்கில் உள்ள பின்னர் ஏரியாவில் இருந்து வெளிவர மறுத்துவிட்டது.

Next Story