Top
undefined
Begin typing your search above and press return to search.

மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானதையும் பழித்துக்காட்டும் துரோகிகள்!

மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானதையும் பழித்துக்காட்டும் துரோகிகள்!

MuruganandhamBy : Muruganandham

  |  5 Jun 2020 6:00 AM GMT

ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். இதனையும் பழித்துக்காட்டி பா.ஜ.க தான் ஐ.நா.நல்லெண்ண தூதராக நியமித்தது போல, சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதனையடுத்து மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மதுரை மோகனுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது மகள் நேத்ராவின் கல்விக்கு உதவிகளும் குவிந்து வந்தது. இந்நிலையில் நேத்ராவை ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான (United Nations Association for Development and Peace) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருடைய எதிர்காலத்திற்காக சுமார் ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பாக பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதிலும் அரசியல் செய்ய முயற்படும் துரோகிகள், அந்த மாணவியை பாஜகவில் இணைக்கும் முயற்சி தான் இது என்று அடிப்படை ஆதாரமின்றி வதந்தி பரப்பி வருகின்றனர்.

ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான அமைப்பே மாணவி நேத்ராவை தேர்வு செய்துள்ளது. இது தன்னிச்சையான அமைப்பு என்பதால், யாருடைய தலையீடும் இருக்காது. பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் மாணவியின் பெயரை குறிப்பிட்டதால், ஊடகங்கள் மூலம் பிரபலமடைந்து, ஐ.நா அமைப்பே தேடி வந்து வாய்ப்பு கொடுத்துள்ளது.

ஒரு மாணவியின் நல்லெண்ணத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை, ஒரு கட்சியை தொடர்புபடுத்தி விஷமிகள் வதந்தி பரப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story