Top
undefined
Begin typing your search above and press return to search.

என்னது உதயநிதிக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா.? அப்போ 2013ல் நயன்தாராவோடு பழனி முருகனை தரிசித்தது யாராம்.?

என்னது உதயநிதிக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா.? அப்போ 2013ல் நயன்தாராவோடு பழனி முருகனை தரிசித்தது யாராம்.?

MuruganandhamBy : Muruganandham

  |  25 Aug 2020 9:53 AM GMT

விநாயகர் சதுர்த்தி அன்று உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து, விளக்கம் அளித்த உதயநிதி ஸ்டாலின், தனக்கும், தனது மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை என்றும், தனது மகளின் விருப்பத்தின் பேரில் ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் படத்தை பதிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக கொஞ்சம் உதயநிதியின் வரலாற்றை கிளறிப்பார்க்க வேண்டும். 2013ஆம் ஆண்டில் "இது கதிர்வேலன் காதல்" படத்தின் படப்பிடிப்புக்காக பழனி வந்த நயன்தாரா, மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற பழனியாண்டவர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஹீரோ உதயநிதியும் ஜோடியாகச் சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பழனி முருகனை தரிசிக்க வேண்டும் என தனக்கு நீண்ட நாட்களாக ஆசை என நயன்தாரா சொன்னதால், கோவில் நிர்வாகத்துக்கு முன்கூட்டியே சொல்லி சிறப்புத் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர் படக்குழுவினர்.

அப்போது கோவிலில் சாமி தரிசனம் செய்த உதயநிதி ஸ்டாலினை புகைப்படம் எடுப்பதற்கு அவருடன் வந்த உதவியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நயன்தாராவையும் எடுக்க விடவில்லை. இருந்தாலும் ஒரு சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.





விநாயகர் படத்தை பதிவிட்டு, தமக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று உதயநிதி அந்தர் பல்டி அடித்துள்ள நிலையில், அவர் பழனியில் சாமி தரிசனம் செய்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story