Top
undefined
Begin typing your search above and press return to search.

"சாப்பிட உணவு இல்லாததால் ராஜநாகத்தை சாப்பிட்ட அருணாச்சலப்பிரதேச மலை வாழ் மக்கள்" என்ற தலைப்பில் செய்தியை பரப்பிய NDTV : உண்மை என்ன?

சாப்பிட உணவு இல்லாததால் ராஜநாகத்தை சாப்பிட்ட அருணாச்சலப்பிரதேச மலை வாழ் மக்கள் என்ற தலைப்பில் செய்தியை பரப்பிய NDTV : உண்மை என்ன?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 April 2020 2:46 AM GMT

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சாப்பிட உணவு கிடைக்காததால் ராஜநாகத்தை பிடித்து சாப்பிடுகின்றனர் அருணாச்சல பிரதேச மலை வாழ் மக்கள் என்ற செய்தி ஒன்றை NDTV பிரசுரித்தது.

NDTV பிரசுரித்த செய்தி

"சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோவில், மூன்று ஆண்கள் தங்கள் தோள்களில் விஷ பாம்பின் சடலத்துடன் காணப்படுகிறார்கள். காட்டில் இருந்த அந்த பாம்பை அவர்கள் கொன்றதாகக் கூறுகிறார்கள்.

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தங்களிடம் உணவு இல்லை என்று அந்த காணொளியில் ஒருவர் கூறுகிறார். மேலும் சில நாட்களாக மாமிசம் சாப்பிடவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்", என்று NDTV செய்தியை பிரசுரித்தது.

மத்திய அமைச்சர் வருத்தம்

அருணாச்சல பிரதேச மக்களையும் மலை வாழ் மக்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் உண்மைக்கு மாறாகவும் இருந்த இந்த செய்தியை கண்டு மத்திய அமைச்சர் கிரண் ரெஜிஜு ட்விட்டரில் பதிவிட்டார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "செய்தியை சரிபார்க்காமல் பிரசுரிக்காதீர்கள். மிருகங்களை கொள்வதற்கு எதிரானவன் நான். ஆனால், உண்ண உணவு இல்லாததால் ராஜநாகத்தை அடித்து கொள்கிறார்கள் என்னும் செய்தி கசப்பாக இருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் உணவிற்காக பாம்பை யாரும் வேட்டையாடுவது இல்லை", என்று கூறினார்.

மாநில அரசு விளக்கம்

NDTV பிரசுரித்த செய்தி குறித்து விளக்கம் தெரிவித்த மாநில அரசு, "மாநிலத்தில் எங்கும் அரிசி தட்டுப்பாடு இல்லை. குறைந்தபட்சம் 3 மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பில் உள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 20,000 பேருக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன", என்று கூறியது.

செய்தியை புதுப்பித்த NDTV

மாநில அரசின் விளக்கத்தை அடுத்து செய்தியை புதுப்பித்தது NDTV. மாநில அரசு அளித்த விளக்கத்தை பிரசுரித்து, செய்தியின் முக்கிய நோக்கம் வனவிலங்கிற்கு எதிரான குற்றம் தான் என்று ட்விட்டரில் பதிவிட்டது. போலி செய்தியை பரப்பியதற்கு மறுப்போ அல்லது வருத்தமோ கூட NDTV தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story