Top
undefined
Begin typing your search above and press return to search.

சீன எல்லையிலுள்ள கிராமங்கள் காலியாவதாக வெளியான செய்திகள் 'போலி': இந்திய ராணுவம் அறிக்கை. !

சீன எல்லையிலுள்ள கிராமங்கள் காலியாவதாக வெளியான செய்திகள்

Saffron MomBy : Saffron Mom

  |  10 Sep 2020 7:07 AM GMT

சீனாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில் உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக்கு (LAC) அருகே கிராமங்கள் காலி செய்யப்படுகின்றன என்பது தொடர்பான ஊடக செய்திகளை இந்திய ராணுவம் முற்றிலுமாக மறுத்தது. இத்தகைய செய்திகள் "போலி மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்தை கொண்டது" என்று தெளிவுபடுத்தியது. மேலும், அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மக்கள் வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம், இது தொடர்பான செய்திகளை மறு ட்வீட் செய்வதற்கு முன்பு அதிகாரிகளால் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தேஸ்பூரின் பாதுகாப்பு தொடர்பு மக்கள் தொடர்பு அதிகாரி பரிந்துரைத்தார்.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் உள்ள மக்மஹோன் கோட்டிற்கு அருகிலுள்ள கிராமவாசிகள் லடாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில் தங்கள் கிராமங்களை காலி செய்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்து அவை போலி எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.



திங்களன்று, சீன இராணுவ வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டரின் செய்தித் தொடர்பாளர், இந்திய ராணுவம் LACயைக் கடந்து பாங்காங் த்சோ ஏரியின் தென் கரைக்கு அருகிலுள்ள ஷென்பாவ் மலைப் பகுதிக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டினார்.

சீன பிரச்சாரத்தை அம்பலப்படுத்திய இந்திய இராணுவம், LACயை மீறவில்லை அல்லது எந்த நிலையிலும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று வலியுறுத்தியது. மாறாக, இந்தியப் படையினர் எதிர்ப்பைக் காட்டியபோது, சீன ராணுவத்தினர் தான் காற்றில் சில சுட்டதாகத் தெரிவித்தது. இந்த கடுமையான ஆத்திரமூட்டல்களுக்கு மத்தியிலும் இந்திய ராணுவம் மிகுந்த கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன என்றும், வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டரின் அறிக்கை சீனாவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்றும் அது விவரித்தது.

கடந்த வாரம் பாங்காங் ஏரியின் தெற்கு கரையில் இந்தியப் பகுதியை ஆக்கிரமிக்க சீனா தோல்வியுற்றதை அடுத்து கிழக்கு லடாக்கில் பதற்றம் பரவியது. இந்தியா பாங்கோங் ஏரியின் தென் கரையில் பல முக்கியமான மலை முகடுகளை ஆக்கிரமித்து, எந்தவொரு சீன நடவடிக்கைகளையும் தடுக்க அப்பகுதியில் விரல் 2 மற்றும் விரல் 3 பகுதிகளில் தனது இருப்பை வலுப்படுத்தியது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 4 ம் தேதி மாஸ்கோவில் சீன பாதுகாப்பு மந்திரி வீ ஃபெங்கே உடனான சந்திப்பில், சீன நடவடிக்கைகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். பாங்கோங் த்சோ உள்ளிட்ட அனைத்து மோதல் மற்றும் எல்லைப் பகுதி பிரச்சினைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுமாறு சீனத் தரப்பை அவர் கேட்டுக்கொண்டார்.

Next Story