Top
undefined
Begin typing your search above and press return to search.

யாருடைய கடனும் தள்ளுபடி செய்யவில்லை : ஊடகங்கள் கட்டவிழ்த்து விட்ட புளுகுமூட்டை - விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் 13 ட்வீட்களில் பதிலடி!

யாருடைய கடனும் தள்ளுபடி செய்யவில்லை : ஊடகங்கள் கட்டவிழ்த்து விட்ட புளுகுமூட்டை - விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் 13 ட்வீட்களில் பதிலடி!

MuruganandhamBy : Muruganandham

  |  29 April 2020 1:42 PM GMT

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராக்கடன் பட்டியல் குறித்து, மக்களை வெட்கக்கேடான முறையில் தவறாக வழிநடத்த ஊடகங்களும், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் முயற்சித்து வருகின்றன.

சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களையும், அவர்களின் வாராக் கடன்களை பற்றியும் ஆர்.பி.ஐ மூலம் தகவல் பெற்றிருந்தார். இப்பட்டியலில் மெகுல் சோக்சி நிறுவனம், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், விஜய் மல்லையா நிறுவனம், நிரவ் மோடி நிறுவனம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. இவர்களது ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு, ராகுல் காந்தி வேண்டுமென்றே கடனைத் திருப்பி அளிக்காதவர்களின் கடன்கள் தள்ளுபடியா என்று கேட்டும் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை மக்களவையில் வெளியிடாமல் மறைத்தது பாஜக என்றும், காரணம் இது அவர்களின் நண்பர்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

அவருக்கு தொடர் ட்வீட்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். "ராகுல் காந்தியும், ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவும் மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கேயுரிய விதத்தில் தரவுகளை பரபரப்பாக்கி வருகின்றனர். அதாவது தரவுகளை அதன் கூற்றிடச் சூழலிலிருந்து தனியே பிரித்து பரபரப்பாக்கி வருகின்றனர்" என்று சாடினார்.





மேலும் 2009 மற்றும் 2013-க்கு இடைப்பட்ட நிதி ஆண்டில், காங்கிரஸ் ஆட்சியில், வணிக வங்கிகள் ரூ.1,45,226 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. இது பற்றி மன்மோகன் சிங்கிடம், ராகுல் ஆலோசித்து தெரிந்துகொள்ளட்டும். இது நடைமுறைகளின் படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதான். அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் நடைமுறை தொடரும். கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

மேலும் இது நடைமுறைகளின் படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதானே தவிர இது அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் நடைமுறையை கைவிடுவதாக அர்த்தமாகாது என்று நிர்மலா சீதாராமன் விளக்கினார்.

"கடனை திருப்பி அளிக்காதவர்கள் தங்களிடம் பணம் இருந்தும் திருப்பி செலுத்தாதவர்கள், பணத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றவர்கள், வங்கிகள் அனுமதியின்றி சொத்துக்களை விற்றவர்கள் ஆகியோர் வேண்டுமென்றே கடனைத் திருப்பி அளிக்காதவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இவர்கள் யுபிஏவின் ஃபோன் பேங்கிங்குடன் தொடர்புடையவர்கள், புரோமோட்டர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.




இங்கு நான் ரகுராம் ராஜன் கூறியதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன், வாராக்கடன்களில் பெரிய அளவு 2006-08இல் உருவானதே. புரோமோட்டர்களுக்கு அதிக கடன்கள் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கெனவே கடனைத் திருப்பி அளிக்காமல் ஏமாற்றியவர்கள், தனியார் வங்கிகள் இவர்களுக்கு கடன் அளிக்காத போதும் பொதுத்துறை வங்கிகள் அளித்து வந்தன. தரமான கடன் அளிப்பு முறைகள் தேவை, என்று ரகுராம் ராஜன் அப்போது தெரிவித்ததைக் குறிப்பிட விரும்புகிறேன்.

வேண்டுமென்றே ஏமாற்றுபவர்கள் மீது பிரதமர் மோடி அரசுதான் நடவடிக்கை எடுத்து வருகிறது. 9,967 கடன் மீட்பு வழக்குகள், 3,515 எப்.ஐ.ஆர்.கள், சட்டங்களும் அமலில் உள்ளன. நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி, மல்லையாவிடமிருந்து முடக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு 18,332.7 கோடி.

மேலும் இவை பற்றியெல்லாம் லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் சரி எதிர்கட்சியாக உட்கார்ந்திருக்கும் பொதும் சரி ஊழலை ஒழிப்பதிலோ குரோனியிசத்தை ஒழிப்பதிலோ ஏதாவது முனைப்புக் காட்டியுள்ளதா என்பதை அவர்களே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளட்டும்" என்று நிர்மலா சீதாராமன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.






Next Story