Top
undefined
Begin typing your search above and press return to search.

போலி செய்தியை பரப்புகிறதா காங்கிரஸ்? வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ரயில் கட்டணம் தேவையில்லை.. !

போலி செய்தியை பரப்புகிறதா காங்கிரஸ்? வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ரயில் கட்டணம் தேவையில்லை.. !

Kathir EditorBy : Kathir Editor

  |  4 May 2020 10:33 AM GMT

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் கட்டணம் முழுவதையும் அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்று அதன் தலைவர் சோனியா காந்தி இன்று காலை அறிவித்தார். இந்த அறிவிப்பை ஊடகங்கள் பெரிதாக்கி, மத்திய அரசு ரயில் கட்டணம் வசூலிக்கிறது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். இந்த செய்திகளின் உண்மை தன்மையை பார்ப்போம்.

மே 2 ஆம் தேதி மத்திய ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, "மாநில அரசுகள் கோரிக்கைக்கு ஏற்றவாறு பயணிகள் ரயில் சேவை அளிக்கப்படும். வேறு எந்த பயணிகள் ரயில் சேவையும் இயக்கப்படாது. எந்த ரயில் நிலையங்களிலும் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது", என்று கூறப்பட்டுள்ளது.




மேலும், வெளி மாநில தொழிலாளர்களின் இந்த ரயில் பயணத்தின் செலவை 85% மத்திய அரசும், 15% மாநில அரசாங்கங்களும் ஏற்கும் என்று கூறப்பட்டுள்ளது. நிலை இவ்வாறு இருக்க, வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்லும் ரயில் கட்டணங்களை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்ற அறிவிப்பை அடுத்து பா.ஜ.க-வினர் பலரும் விளக்கம் அளித்து வருகின்றனர்.

பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா ட்விட்டரில் ராகுல் காந்திக்கு பதில் அளிக்கையில், "ராகுல் ஜி அவர்களே. மத்திய அரசின் அறிக்கையை இத்துடன் இணைத்துள்ளேன். எந்த ரயில் நிலையங்களில் கட்டணம் வசூலிக்கப்படாது. ரயில் கட்டணத்தின் 85% செலவை மத்திய அரசும், 15% செலவை மாநில அரசாங்ககளும் ஏற்கும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை இதை பின்பற்ற சொல்லுங்கள்", என்று பதிவிட்டார்.

எனினும் பலரும் ரயில் டிக்கெடுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, "ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதில்லை என்றால், இது என்ன?", என்று பதிவிட்டு வந்தனர்.




இதற்கு பதிலளித்த பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா, "இந்திய ரயில்வே துறை, ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் டிக்கெட்டுகளை மாநில அரசுகளிடம் அளிக்கும். மாநில அரசுகள் அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டு பயணிகளுக்கு அளிக்க வேண்டும்", என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.




Next Story