Top
undefined
Begin typing your search above and press return to search.

உ.பி: 'ஜெய் ஸ்ரீ ராம்' கூறச் சொல்லி கார் ஓட்டுநர் கொல்லப்படவில்லை - ஊடக வதந்திகளை உடைத்த போலீசார்.!

உ.பி: ஜெய் ஸ்ரீ ராம் கூறச் சொல்லி கார் ஓட்டுநர் கொல்லப்படவில்லை - ஊடக வதந்திகளை உடைத்த போலீசார்.!

Saffron MomBy : Saffron Mom

  |  8 Sep 2020 9:39 AM GMT

உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா காவல்துறை, திங்கட்கிழமை முஸ்லிம் வாடகைக் கார் ஓட்டுனர் அப்டாப் ஆலம், ஒரு மதவாத கும்பலால் 'ஜெய்ஸ்ரீராம்' என கூறச் சொல்லி அடித்துக் கொல்லப்பட்டதாக வந்த தகவல்களை மறுத்துள்ளது.


சமூக ஊடகங்களில் பதிலளித்த மத்திய நொய்டாவின் DCP, உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலண்டஷறில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்த வாகன ஓட்டுனர், முகம் தெரியாத நபர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் அந்த வழியில் ஒரு தகராறு ஏற்பட்டு அவர் கொல்லப் பட்டதாகவும் கூறினார். அவருடைய மொபைல் போன் அந்த இடத்திலிருந்து காணாமல் போனது. அவர் பயங்கரமாக அடிக்கப்பட்டு பக்கத்தில் இருந்த மோகன் ஸ்வரூப் மருத்துவமனைக்கு அதே காரில் கொண்டு செல்லப்பட்டார்.

இடதுசாரி பிரச்சார வலைத்தளமான தி வயர், கொல்லப்பட்டவரின் மகனிடம் ஒரு ஆடியோ கிளிப் இருப்பதாகவும், மதுபோதையில் இருந்த தாக்குதல் நடத்திய குண்டர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கூறச் சொல்லி கொலை செய்ததாகவும் கூறுகின்றனர். தன்னுடன் தன் தந்தை தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அது துண்டிக்கப்படாததால் அனைவரின் உரையாடல்களையும் தாங்கள் கேட்டதாகவும் அதை பதிவு செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த ஆடியோ பதிவுகளை சோதனை செய்த போலீசார், அவர் ஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி கொல்லப்படவில்லை என்றும் தெளிவாக மறுத்துள்ளனர்.

போலீசார் மேலும் கூறுகையில் ஜெய் ஸ்ரீராம் என்று வாசகம் போல் கேட்பது அவர்களுக்குள்ளே பேசிக்கொள்ளும் அல்லது வேறு யாரோ வணக்கம் கூறுவது போல் தெரிவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் எல்லாக் கோணங்களிலிருந்தும் இந்த வழக்கை ஆராய்ந்து வருவதாக கூறுகிறார்கள். இப்போதைக்கு காவலர்கள், அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது FIR, ஐபிசி செக்சன் 394,302 மற்றும் 201ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள்.

Next Story