Top
undefined
Begin typing your search above and press return to search.

2018 போராட்ட வீடியோவை தற்போது பரப்பும் எதிர்க் கட்சிகள் - உண்மையை உடைத்த லக்னோ போலீசார்.!

2018 போராட்ட வீடியோவை தற்போது பரப்பும் எதிர்க் கட்சிகள் - உண்மையை உடைத்த லக்னோ போலீசார்.!

Saffron MomBy : Saffron Mom

  |  13 Sep 2020 1:29 AM GMT

ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் லக்னோவில் போராட்டத்தில் ஈடுபடுவது போன்று ஒரு பழைய வீடியோவை வெளியிட்டு அது தற்போது நடந்தது என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் முயற்சிப்பது போன்ற வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பகிர்ந்த சமாஜ்வாதி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஐ. பி.சிங், எதிர்வரும் காலத்தில் பா.ஜ.க அமைச்சர்கள் பொது பொதுமக்களால் இதுபோன்று தாக்கப்படுவார்கள் என்று மிரட்டியுள்ளார். பாரத் சமாஜ் கட்சியின் தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் செய்தி தொடர்பாளர் பியூஸ் மிஸ்ராவும் இந்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர.



மேலும் பியூஸ் மிஸ்ரா கூறுகையில், "லக்னோவில் தனக்கு எதிரான கோஷங்களை கேட்க முடியாமல் கோயல் ஓடிவிட்டார்" என்று கூறினார். ஜீ நியூஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ நவம்பர் 2018ல் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ஜீ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், அந்த வீடியோவின் இடது பக்கத்தின் கீழ் 17 நவம்பர் 2018 என்ற தேதி குறிப்பிட்டு உள்ளது.



இதுபற்றி லக்னோ போலீஸ் கமிஷனர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கூறுகையில் "இது ஒரு தவறான செய்தி, இந்த வீடியோ 2018 இல் எடுக்கப்பட்டது" என்றுக் கூறப்பட்டுள்ளது. அவருக்கும், மற்ற யாருக்கும் காயம் படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மோடி அரசுக்கு எதிராக சமூக ஊடக பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. முக்கியமாக NEET மற்றும் JEE பொதுத்தேர்வுகளில் பொதுமக்களுக்கு உடன்பாடு இல்லாதது போன்ற பழைய வீடியோக்களை வெளியிடுவது, போட்டி தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவில் பொதுமக்களுக்கு உடன்பாடு இல்லை என்பதும் போன்ற பதிவுகளை தனது டுவிட்டர் மற்றும் இணையதள பக்கத்தில் வெளியிட்டு மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லாதது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் எதிர்க் கட்சிகள் செயல்படுகிறது.

Image Credits : India TV

Next Story