Top
undefined
Begin typing your search above and press return to search.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உடல்நிலை குறித்து பரவும் வதந்தி - உண்மையில் என்ன நடக்கிறது உள்ளே!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உடல்நிலை குறித்து பரவும் வதந்தி - உண்மையில் என்ன நடக்கிறது உள்ளே!

MuruganandhamBy : Muruganandham

  |  8 May 2020 7:22 AM GMT

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பெரும் நெருக்கடியை நாடு எதிர்த்துப் போராடும்போது, உள்துறை மந்திரி அமித் ஷாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன.

இன்று சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் ஷாஹித் சித்திகி ஒரு ட்வீட்டை வெளியிட்டார். அதில் அமித் ஷாவுக்கு எல்லாம் சரியாக இல்லை. ஏதோ மிகவும் அசாதாரணமான அல்லது தீவிரமான ஒன்று நடந்திருப்பதாக அவர் கூறினார். மேலும் அரசாங்கம் தாமாக முன்வந்து மக்களிடம் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஊரடங்கு குறித்து உள்துறை அமைச்சகம் தொடர்ந்து வழிகாட்டுதல்களை வெளியிட்டு வந்தாலும், உள்துறை அமைச்சர் பின்னணியில் இருக்க விரும்புகிறார். இருந்தும் அவர் எங்கே என்று பலரும் கேட்க காரணமாக அமைந்தது போலி செய்திகள் தான். ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியான நிலையிலும், போலி செய்தித் பரப்பி வரும் ராணா அய்யூப், உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்திய காலங்களில் காணப்படவில்லை என்று கூறியிருகின்றார்.

அமித் ஷா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், அதனால்தான் அவர் பணிக்கு வரவில்லை என்ற வதந்தியை பரப்பினர்.

ஆனால் இவை அனைத்தும் தவறான பிரச்சாரங்களாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். விசாகப்பட்டின ரசாயன ஆலையில் இருந்து ஸ்டைரீன் வாயு கசிந்ததை அடுத்து விசாகப்பட்டினத்தின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ட்வீட் செய்துள்ளார். என்.டி.எம்.ஏ அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசியதாக தெரிவித்த அவர், அவர்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு பி.எஸ்.எஃப் ஜவான்கள் இறந்ததற்கு உள்துறை அமைச்சரும் வருத்தத்தை தெரிவித்தார். அவரது ட்விட்டர் கணக்கை பார்த்தாலே, சுறுசுறுப்பாக செயல்படுவதையும், தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்வதையும் காண முடிகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் மே 1 ஆம் தேதி மின் துறை தொடர்பான கூட்டத்திலும், மே 2 ஆம் தேதி விவசாயத் துறை தொடர்பான மற்றொரு கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். கூட்டங்களின் புகைப்படங்களை பிரதமர் வெளியிட்டார், அங்கு அமித் ஷாவைக் காணலாம்.

எனவே, அமித் ஷாவின் உடல்நிலை குறித்த வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை.


Next Story