Top
undefined
Begin typing your search above and press return to search.

Fact Check : கும்பமேளாவிற்கு யோகி அரசு ஏற்பாடு செய்த பேருந்துகளை புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா வத்ரா அனுப்பிய பேருந்துகள் என போலி செய்தியை பரப்பும் உடன் பிறப்புகள்..!

Fact Check : கும்பமேளாவிற்கு யோகி அரசு ஏற்பாடு செய்த பேருந்துகளை புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா வத்ரா அனுப்பிய பேருந்துகள் என போலி செய்தியை பரப்பும் உடன் பிறப்புகள்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 May 2020 6:35 AM GMT

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தனது கட்சி ஏற்பாடு செய்துள்ள 1,000 பேருந்துகளை அனுமதிக்குமாறு மே 16 அன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். பின்னர், ஒரு வீடியோ செய்தியில், உ.பி. எல்லையில் பேருந்துகள் காத்திருப்பதாக அவர் கூறியிருந்தார்.

அவரது வேண்டுகோளுக்குப் பிறகு, நெடுஞ்சாலையில் ஒரு வரிசையில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் நிற்கும் படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது. இவை பிரியங்கா அனுப்பிய பேருந்துகள் என்று கூறி, யோகி அவர்கள் இந்த பேருந்துகள் செல்ல அனுமதி மறுத்தார் என்று பல காங்கிரஸ் ஆதரவாளர்கள் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர். "வெட்கக்கேடானது, இது போக்குவரத்து நெரிசல் அல்ல. உத்தரப்பிரதேசத்தில், பிரியங்கா காந்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்தார், ஆனால் யோகி ஜி அனுமதி மறுத்துவிட்டார்" என்று பதிவுகள் பகிரப்பட்டன.



வடக்கே காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஹிந்தியில் இந்த போலி செய்தியை பரப்ப இங்குள்ள தி.மு.க. மற்றும் ஆதரவாளர்கள், நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா என்று தமிழிலும் இந்த போலி செய்தியை பரப்பி வருகின்றனர்.

Here the truth behind the viral image #AFWAFactCheck | #CoronavirusFacts | #ICYMI

தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருப்பதாக கூறிக்கொள்ளும் உடன்பிறப்பு ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போலி செய்தியை பகிர்ந்துள்ளார்.



மேலும் சிலரும் இதே பதிவை Copy Paste செய்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த போலி செய்தியை வைத்துக்கொண்டு மத்திய அமைச்சரை தரைகுறைவாக விமர்சித்துள்ளார் தி.மு.க. ஆதரவாளர் ஒருவர்.

தொடர்ந்து பலரும் இந்த போலி செய்தியை பதிவிட்டு வரும் நிலையில், பொது மக்கள் செய்திகளை சரி பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story