Top
undefined
Begin typing your search above and press return to search.

விவசாய மசோதாக்கள் 2020: குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்தார் பிரதமர் மோடி.!

விவசாய மசோதாக்கள் 2020: குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்தார் பிரதமர் மோடி.!

Saffron MomBy : Saffron Mom

  |  21 Sep 2020 2:07 AM GMT

M.S.P (குறைந்தபட்ச ஆதரவு விலை) விவசாயிகளுக்கு கிடைக்குமா என்று ராகுல் காந்தி மோடி அரசை நோக்கி எழுப்பியுள்ள கேள்விக்கு, பிரதமரும் அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மாநிலங்களவையில் பல்வேறு விவசாய மசோதாக்களை நிறைவேற்றிய பின்னரும் கூட, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் மோடி அரசுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு பீதியை ஏற்படுத்துகிறார்கள். மேலும் நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வை தவிர்த்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாய் ரே பரேலி எம்.பி மற்றும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அரசாங்கத்தை தாக்கி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

APMC சந்தை அகற்றப்பட்டால் விவசாயிகளுக்கு M.S.P (குறைந்தபட்ச ஆதரவு விலை) எவ்வாறு கிடைக்கும்? M.S.P க்கு அரசாங்கம் ஏன் இன்னும் உத்தரவாதம் அளிக்கவில்லை? என்ற கேள்வியை ராகுல் காந்தி தொடர்ச்சியாக எழுப்பினார்.

பிரதமர் மோடிக்கும், மற்ற அமைச்சர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் உண்மையான தகவலுக்கு பதிலாக, தவறான தகவல்களை பரப்புவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் வழி வகுக்கிறார்.

மேலும் பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியும் பகிர்ந்துள்ளார். "நான் முன்பே சொல்லியிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். M.S.P அமைப்பு தொடரும். விவசாய விளைபொருட்களை அரசாங்கம் தொடர்ந்து கொள்முதல் செய்யும். எங்கள் விவசாயிகளுக்கு சேவை செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம். அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு அவர்களின் வரும் தலைமுறையினருக்கும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கும், நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பம் தேவை" என்றும் பிரதமர் மோடி கூறினார்.

"பல தசாப்தங்களாக இந்திய விவசாயி பல்வேறு தடைகளுடன் பிணைக்கப்பட்டு இடைத்தரகர்களால் கொடுமைப்படுத்தப்பட்டனர். பாராளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்கள் விவசாயிகளை இத்தகைய துன்பங்களில் இருந்து விடுகின்றன. இந்த மசோதாக்கள் விவசாயிகள் இரட்டை வருமானம் பெறும் முயற்சிக்கு தேவையான தூண்டுதல்களை செய்கிறது மற்றும் அவர்கள் அதிக வருமானம் பெறுவதையும் உறுதி செய்கிறது" என்று பிரதமர் மோடி மேலும் ஒரு ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சி எம்.பிக்கள் எழுப்பிய தீவிரமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர், மேஜையில் முன்வைத்த துணைத் தலைவரின் மைக்கை உடைத்தார். டெரக் ஓ பிரையன், அவையின் நடவடிக்கைகளை நிறுத்தும் முயற்சியில் மாநிலங்களவை துணைத் தலைவரின் கையில் கைகளில் ஏறினார். இதுபோன்ற செயல்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

முன்னதாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மோடி அரசாங்கத்தால் விவசாய சீர்திருத்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏற்கனவே இவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story