Top
undefined
Begin typing your search above and press return to search.

நோயால் இறந்த பெண்ணை பசியால் இறந்ததாக சித்தரிக்கும் ஊடகங்கள் - இக்கட்டான நேரத்திலும் போலி செய்தியை பரப்புவதிலேயே மும்முரம்!

நோயால் இறந்த பெண்ணை பசியால் இறந்ததாக சித்தரிக்கும் ஊடகங்கள் - இக்கட்டான நேரத்திலும் போலி செய்தியை பரப்புவதிலேயே மும்முரம்!

MuruganandhamBy : Muruganandham

  |  28 May 2020 6:20 AM GMT

அண்மையில், பத்திரிகையாளர் ராணா அய்யூப், ரயில் நிலையத்தில் இறந்த பெண் பசியால் இறந்தார் என்றும், அரசு உணவு மற்றும் தண்ணீரை சரியாக கொடுக்காததே இதற்கு காரணம் என்று தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் ரயில்வே பிளாட்பார்மில் இறந்து கிடக்கும் ஒரு பெண்ணை சுற்றி, குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை வைத்து, சில தவறான தகவல்களுடன் மக்களிடம் உணர்ச்சியை தூண்டும் விதமாக போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.





முசாபர்பூர் ரயில் நிலையத்தில் பெண் இறந்ததிற்கு பின்னால் உள்ள உண்மை:

பத்திரிகையாளர் ராணா அய்யூப் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், அந்த பெண் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் "சரிந்து விழுந்து" பட்டினியால் இறந்துவிட்டார் என்று கூறினார். ரயில்வே அமைச்சக வட்டாரங்களின்படி, தனது சகோதரி, கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்த அந்த பெண், நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டு, பயணத்தின் போது ரயிலில் இறந்துவிட்டார்.

ரயில்வே பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் மற்றும் துணை எஸ்.பி. தலைமையக ஜி.ஆர்.பி முசாபர்பூர் திரு ராமகாந்த் உபாத்யாய்க்கு ரயிலில் பெண் மரணம் குறித்து தகவல் கிடைத்ததாகவும், நிலைய பொறுப்பாளரின் அனுமதியைப் பெற்ற பின்னர், ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் முசாபர்பூர் ரயில்வே பிரிவு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டார்.

அந்தப் பெண் ஏற்கனவே பல்வேறு வியாதிகளால் அவதிப்பட்டார். ஆனால் அந்தப் பெண் பசியால் இறந்துவிட்டார் என்று அய்யூப் பொய்யாகக் கூறியது மட்டுமல்லாமல், கற்பனைக் கதையையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். ஷ்ராமிக் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சரியான மருத்துவ உதவி வழங்கப்படுவதாக இந்திய ரயில்வே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளதால், அந்தப் பெண் பசியால் இறந்துவிட்டார் என்ற ராணாவின் கூற்று பொய்யானதாகும்.

Next Story