Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா சோதனை செய்த ஏவுகணை நொடிகளில் வெடித்து சிதறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ - இணையத்தில் பரவும் தகவலுக்கு பின்னால் இப்படியொரு சதி இருக்கிறதா?

இந்தியா சோதனை செய்த ஏவுகணை நொடிகளில் வெடித்து சிதறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ - இணையத்தில் பரவும் தகவலுக்கு பின்னால் இப்படியொரு சதி இருக்கிறதா?

MuruganandhamBy : Muruganandham

  |  24 July 2020 3:17 AM GMT

இந்தியா சோதனை செய்த ஏவுகணை நொடிகளில் வெடித்து சிதறியதாக, முகநூல் பக்கத்திலும், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளில் ஒரு ஏவுகணை வெடித்து சிதறுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், அந்த வீடியோவுக்கு கீழே பதிவிடப்பட்ட தகவல்களில், வீடியோவில் இருப்பது இந்திய ஏவுகணை என்றும், சோதனையின் போது ஏவப்பட்ட சில நொடிகளிலேயே அது வெடித்து சிதறியதாக கூறப்பட்டுள்ளது.

இன்னும் சில சமூக வலைதள பதிவுகளில் இதுபோன்ற ஏவுகணையை வைத்துக் கொண்டு இந்தியா நேபாளத்திற்கு எதிரான சண்டையை எப்படி எதிர்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வீடியோ குறித்து இணையத்தில் தேடிய பொழுது, இந்த சம்பவத்துக்கும் இந்தியாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

வீடியோவில் இருப்பது 2013 ஆம் ஆண்டு வெடித்து சிதறிய ரஷ்ய ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட் மூன்று நேவிகேஷன் செயற்கைக்கோள்களை கொண்டு செல்லும் போது வெடித்து சிதறியது.

அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று, ஏவப்பட்ட நொடிகளில் வெடித்து சிதறிய ஏவுகணை இந்தியாவுக்கு சொந்தமானது இல்லை என உறுதியாகி இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான போக்கை நேபாள அரசு சமீப காலங்களில் கடுமையாக பின்பற்றி வருகிறது. முன்னதாக நேபாள போலீஸ் பீகார் எல்லையை ஒட்டிய கிராமத்தில் இந்தியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் போக்கை திசை திருப்பிவிடும் நோக்கில், நேபாள மக்கள் சிலர் இது போன்ற வதந்திகளை பரப்பி வருவது தெரிய வருகிறது.

Next Story