Top
undefined
Begin typing your search above and press return to search.

உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் மக்கள் பாம்பை சாப்பிட்டனரா.? பரவி வரும் போலி செய்தி - உண்மையில் நடந்தது என்ன? #FactCheck

உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் மக்கள் பாம்பை சாப்பிட்டனரா.? பரவி வரும் போலி செய்தி - உண்மையில் நடந்தது என்ன? #FactCheck

MuruganandhamBy : Muruganandham

  |  22 April 2020 1:23 PM GMT

சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்தும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் வதந்திகளை முறியடிக்க தனிப்பட்ட பிரிவை பிஐபி அமைத்துள்ளது. டுவிட்டரில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கான "PIB Fact Check" உள்ளது.

இது சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து, அதன் உண்மைத்தன்மை குறித்து விரிவாக ஆய்வுசெய்து, போலியான செய்திகளை கண்டறிகிறது. அதோடு, டுவிட்டரை பயன்படுத்துவோர் பயனடையும் வகையில், "PIBFactCheck" என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, டுவிட்டரில் உள்ள அதிகாரப்பூர்வமான மற்றும் உண்மையான தகவல்களை பிஐபி இந்தியா மற்றும் பிஐபி மண்டல பிரிவுகள் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் பொது முடக்கத்தின் காரணமாக, உணவு கிடைக்காமல், பீகார் மாநிலத்தின் ஜெஹனாபாத் பகுதியில் குழந்தைகள் தவளைகளை சாப்பிடுவதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவுக்கு பிஐபி உண்மை கண்டறியும் பிரிவு மறுப்புத் தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில், அந்த குழந்தைகளின் வீடுகளில் போதிய அளவில் உணவுப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்ற செய்தி அருணாச்சல பிரதேசத்திலிருந்தும் வெளியாகியுள்ளது. அதில், உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால், பாம்புகளை மக்கள் சாப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு கூறிய கருத்துக்களுடன் குவாஹத்தியில் உள்ள பிஐபி-யின் மண்டல அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம், அந்த செய்தி பொய்யானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கான உணவுப் பொருட்கள் வழக்கமாக விநியோகிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story