Top
undefined
Begin typing your search above and press return to search.

கலைஞர் செய்திகளுக்கு மட்டும் எப்படி மர்ம நபர் ஆனார்.? அப்பட்டமாக திரித்து செய்தி வெளியிட்டது அம்பலம்!

கலைஞர் செய்திகளுக்கு மட்டும் எப்படி மர்ம நபர் ஆனார்.? அப்பட்டமாக திரித்து செய்தி வெளியிட்டது அம்பலம்!

MuruganandhamBy : Muruganandham

  |  26 Feb 2020 2:49 AM GMT

டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், திட்டமிட்டே வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு வெளிநாட்டு தலைவர்கள் வரும் போதும், அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற அற்ப ஆசையில் வன்முறையை கையிலெடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்கு முன்னர் வரை, லத்தி சார்ஜ் அளவுக்கு மட்டுமே சென்று, கட்டுப்படுத்தக்கூடிய அளவில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க அதிபர் வருகைக்கு பின்னரே போராட்டம் கலவரமாக மாறி பத்துக்கும் மேல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு தலைவர்கள் வருகையின் போது, போராட்டத்தை தீவிரப்படுத்திக் காட்டினால், சர்வதேச அளவில் கவனத்தை பெறலாம் என்ற தவறான வழி காட்டுதலின் பேரில் போராட்டக்காரர்கள் செயல்பட்டு வருவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இவர்களின் சுயநலத்தால் டெல்லியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கலவரத்தின் போது காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியை காட்டி முன்னேறிய ஷாருக் என்ற பயங்கரவாதி பிடிபட்டுள்ளான். இதனை மறைத்த ஒரு சில தமிழக ஊடகங்கள், மர்ம நபர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்று திரித்து செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

அவன் பெயர் ஷாருக் என்பதும், காவல்துறையினரையே துப்பாக்கியை காட்டி மிரட்டினான் என்று வடஇந்திய ஊடகங்கள் தெளிவாக செய்தி வெளியிட்ட போதிலும், தமிழகத்தில் கலைஞர் செய்திகளுக்கு மட்டும் எப்படி மர்ம நபர் ஆனார் என்று விளங்கவில்லை. ஒரு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய முடியும் என்றால், அது செய்தியாகும், விவாதமாகும். இதையெல்லாம் காட்டினால் மக்கள் உஷராகி விடுவார்கள் அல்லவா.? அதனால் தான் வாய் மூடி மவுனியாகவே இருக்கின்றன ஒரு சில தமிழக ஊடகங்கள்.







Next Story