Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டு ஜி.டி.பி 50 ஆண்டுகளில் 764 மடங்கு வளர்ந்துள்ளதா? - பொய் செய்தியை பரப்பும் தி.மு.க கும்பல்!

தமிழ்நாட்டு ஜி.டி.பி 50 ஆண்டுகளில் 764 மடங்கு வளர்ந்துள்ளதா? - பொய் செய்தியை பரப்பும் தி.மு.க கும்பல்!

Pradeep GunasekaranBy : Pradeep Gunasekaran

  |  24 Sep 2020 6:06 AM GMT

இன்றைக்கு தங்களை சமூக போராளிகள் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் பலரும், புறவாசல் வழியில் திமுகவிடம் ஆதாயம் தேடிக்கொள்பவர்களாக மட்டுமே இருப்பதை காண முடிகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, தன்னை ஜல்லிக்கட்டு ஆதரவாளராக வெளிக்காட்டிக்கொண்ட கார்த்திகேய சிவசேனாதிபதி, கடைந்தெடுத்த திமுக ஆதரவாளர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெளியில் தன்னை சமூக ஆர்வலர் போல அடையாளபடுத்திக்கொண்டு, திமுகவிற்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்தார்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பொருளாதாரம் குறித்து பேசியதாக வெளிப்படையாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்தே, அவரும் ஒரு கட்சியில் துண்டு போட்டு காத்திருக்கும், தீவிர தொண்டன் என்பது தெரிய வந்தது. உதயநிதியிடம் பொருளாதாரம் குறித்து விவாதித்ததனாலோ என்னவோ, பொருளாதார அறிவு கொப்பளித்து பொங்குவது போல தெரிகிறது.


தி.மு.க-வின் டியூசன் மாஸ்டர் கம்பெனியான ஐ-பேக் உருவாக்கிய ஒரு தகவலை, ஏதோ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டதை போல சித்தரித்து, தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் பகிர்ந்த தகவல் துளியளவும் உண்மையில்லை, ஆதாரம் கேட்டால் கொடுக்க முடியாது என்று தெரிந்திருந்தும், ஐ-பேக் உருவாக்கிய போலி கருத்துப்படத்தை அப்படியே வெளியிட்டார்.


அந்த ட்விட்டர் பதிவு கூட இன்னொருவரை பார்த்து காப்பியடித்தது என்று சொல்லி நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதில் இடம்பெற்றிருக்கும் புள்ளி விவரங்களும் அப்பட்டமான பொய் என்பது தெரிய வருகிறது. பின்ன உதயநிதியிடம் பொருளாதாரம் குறித்து விவாதித்தல், டேட்டா எப்படி இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்.

எந்த சோஷியல் மீடியாவை வைத்து இவர்கள் ஆதாரமில்லாமல் போலி தகவலை பரப்பினார்களோ, அதே சோஷியல் மீடியாவில் ஆதாரத்தோடு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. புருஷோத்தமன் என்பவர், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களை அலசி ஆராய்ந்து, அவர்கள் சொன்னது பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது வரலாற்றில் எப்போதுமே இருந்து வந்தே உள்ளது. குறிப்பாக வெள்ளையர் காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சி பம்பாய், வங்காளம் போன்றே சிறப்பாக இருந்தே உள்ளது. ஆனால் தமிழகத்தின் எல்லா வளர்ச்சியையும் திராவிடத்தால் என்பது போல ஒரு பொய் புரட்டு வேலையில் திராவிடம் எப்போதும் ஈடுபடும், அது போல இப்போது ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை திராவிட கும்பல் பரப்பி வருகிறது.

1970ல் $0.34 பில்லியனாக இருந்த ஜிடிபி இப்போது $260 பில்லியனாக உள்ளது, இது 764 மடங்கு என்றும், அதே நேரம் இந்தியா $62 பில்லியனில் இருந்து இப்போது $2.9 டிரில்லியனாக 47 மடங்கு மட்டுமே வளர்ந்துள்ளது என பரப்பி வருகிறார்கள். இதில் உள்ள பிழைகளை பார்ப்போம், 1970ல் தமிழக ஜிடிபி $0.34 பில்லியன், இந்தியா ஜிடிபி $62 பில்லியன் எனில் இந்திய ஜிடிபியில் தமிழகத்தின் பங்கு வெறும் 0.5% மட்டுமே. இதற்கு வாய்ப்பே இல்லை. இந்தியா ஜிடிபியில் குறைந்தது 5% ஆகவாவது இருந்திருக்குமே யொழிய 0.5% ஆக இருக்க வாய்ப்பே இல்லை. எனவே இது குறித்த புள்ளி விபரங்களை இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபர தளங்களில் தேடி எடுக்கப்பட்டது. வெள்ளையர்கள் ஆண்ட காலத்திலிருந்து நூறு ஆண்டுகளுக்கும் மேலான புள்ளி விபரங்கள் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் பெறலாம்.

அப்படி தேடியதில் கிடைத்த விபரம் இதோ

1970-71-இல் இந்தியாவின் ஜிடிபி 44382 கோடி ரூபாய்கள், அதே 1970-71 இல் தமிழகத்தின் ஜிடிபி 2371கோடி ரூபாய்கள் இப்படி பார்த்தால் இந்திய ஜிடிபியில் தமிழகத்தின் பங்கு 5.34%

அன்றைக்கு ஒரு டாலர் என்பது 7.5 ரூபாய் அப்படி பார்த்தால் இந்தியாவின் ஜிடிபி $59.18 பில்லியன். தமிழ்நாட்டின் ஜிடிபியை ரூபாயில் இருந்து டாலருக்கு மாற்றும் போது $3.16 பில்லியன் ஆகும். இவங்க 316கோடி டாலரை 3.16 பில்லியன் என போடாமல் 316 மில்லியன் என தவறாகவோ வேண்டும் என்றோ கணக்கிட்டு அதை பரப்பிக்கொண்டுள்ளர்கள்.


அதே நேரத்தில் பீகார் வளர்ச்சியை பார்க்கலாம்:

1970-71 இல் பீகாரின் ஜிடிபி 2245 கோடி ரூபாய்கள் 1984-ல் 8824 கோடி 393% வளர்ச்சி

1970-71 இல் தமிழகத்தின் ஜிடிபி 2371 கோடி ரூபாய்கள் 1984-ல் 9151 கோடி 386% வளர்ச்சி

ஆக திராவிடத்தின் முதல் 15 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தை விட மடங்கில் பீகார் வளர்ச்சி சிறிது அதிகமே. இது கிட்டத்தட்ட 2000 ஆண்டு வரை தொடர்ந்துள்ளது. 2000 ஆண்டு பீகார், ஜார்க்கண்ட் இரண்டின் ஜிடிபியையும் கூட்டிக்கொள்ளவும். 1990-களுக்கு பிந்தைய தாராளமயமாக்கலில் தமிழகத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சிக்கு திராவிட அரசுகள் உரிமை கோர இயலாது. அப்படி பார்த்தால் தென் மாநிலங்கள் அனைத்துமே தாராளமயமாக்கலுக்கு பின் வளர்ச்சிகண்டுள்ளது.

மீண்டும் சொல்வது இதை தான், திராவிடத்தால் தமிழகம் வாழவில்லை, தமிழகத்தின் வளர்ச்சி வீழ்ந்தே உள்ளது.தமிழகத்தின் வளர்ச்சியை எப்போதும் பிற வடமாநிலங்களுடன் ஒப்பிடக்கூடாது. தமிழகம் ஒப்பிடப்பட வேண்டியது ஐரோப்பிய நாடுகளுடன். ஆனால் திராவிட அரசுகள் ஐரோப்பிய நாடுகள் அளவிற்கு வளரவேண்டிய தமிழகத்தை வடமாநிலங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டுள்ளன. ஏற்கனவே 70 மார்க் எடுத்தவனை ஏற்கனவே 35 மார்க் எடுத்தவனின் வளர்ச்சியோடு ஒப்பிடக்கூடாது.

ஆதாரம்: http://mospi.nic.in/sites/default/files/press_releases_statements/Estimates_of_SDP_1960-61_to_1983-84.பிடிஎ

https://eands.dacnet.nic.in/Publication12-12-2013/Agricultureat%20a%20Glance2013/page24-89.pdf

Next Story