Top
undefined
Begin typing your search above and press return to search.

The Print சேகர் குப்தாவின் பொய்யும் புரட்டும்.!

The Print சேகர் குப்தாவின் பொய்யும் புரட்டும்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 May 2020 9:01 AM GMT

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு ஆல் படுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு சிறப்பு ரயில் சேவையை அறிமுகப்படுத்தியது இந்த ரயில் சேவைக்கு ஆகும் செலவில் 85% செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் எஞ்சிய 15 சதவீதம் தொகையை மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என்றும் கூறியதாக செய்தி வெளியானது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை குறித்து விசாரணை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த மனுவின் மீதான விசாரணையின்போது புலம்பெயர் தொழிலாளர்களை ரயில்களில் அனுப்பி வைக்க பணம் செலுத்துவது யார் என்று தெளிவாக கூறுமாறு கேள்வி எழுப்பியபோது பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் "அவர்களை அனுப்பி வைக்கும் மாநிலம் அல்லது சொந்த மாநிலம் செலுத்தும்; சில சமயங்களில் பணம் திருப்பிச் செலுத்தப்படும்" என்று கூறினார்.

இதை வைத்து The Print இணைய ஊடகம் மத்திய அரசு 85 சதவீத செலவை ஏற்பதாக கூறிவிட்டு தற்போது மாநிலங்கள்தான் செலவழிக்க வேண்டும் என்று கூறுவதாக பொய்யான செய்தியை பரப்பி வருகிறது. பிற ஊடகங்களில் இருந்தும் ஒரு ரெயில்வே அமைச்சக அதிகாரியிடம் பேட்டி எடுத்தும் மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள The Print இணைய ஊடகம் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு மாறாக திரும்பத் திரும்ப ஒரே பொய்யை ஒப்பித்து உள்ளது.

அதாவது மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வழங்கப்படும் ரயில் சேவைக்கு ஆகும் மொத்த செலவில் 85% செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது. இதையே The Printக்கு பேட்டியளித்த ரயில்வே அமைச்சக அதிகாரியும் கூறியுள்ளார். "பயணச்சீட்டு தொகையில் 85% ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை. ரயில் சேவைக்கு ஆகும் மொத்த செலவில் 85% ஏற்றுக்கொள்ளப்படும் என்று தான் தெரிவித்தது." என்றும் ரயில் சேவையளிக்க ஆகும் மொத்த செலவில் பயணச்சீட்டு விலை 15% மட்டுமே என்றும் கூறியுள்ளார்.‌ இவ்வளவு விவரமாக தெளிவுபடுத்திய பின்னரும் மத்திய அரசு பயணச்சீட்டு விலையில் 85% தருகிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது நீதிமன்றத்தில் மாற்றிப் பேசுகிறது; பொய்‌ சொல்கிறது என்றெல்லாம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது The Print.

கடந்த 2017-18ம் ஆண்டில் ரயில்வே துறை கிட்டத்தட்ட நஷ்டத்தில் இயங்கும்‌ நிலைக்கு‌ தள்ளப்பட்டது. வருமானமாக வந்த ஒவ்வொரு‌ ₹ 100 ரூபாய்க்கும் ரயில்வே ₹ 98.44 ரூபாயை செலவழிக்க நேர்ந்ததாக தலைமை தணிக்கையாளர் தனது‌ அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை இங்கே நினைவுகூற வேண்டும். பயணிகள்‌ ரயில் சேவையில் ஏற்பட்ட இழப்பை‌ ஈடுகட்ட சரக்கு ரயில் சேவையில் கிடைத்த லாபத்தில் 95% செலவழிக்கப்பட்டது‌ என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏன் மத்திய அரசே மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கலாமே என்றால், இலவசம்‌ தானே என்று புலம்பெயர் தொழிலாளர்களுடன் மற்றவர்களும் சேவையைப் பயன்படுத்த எண்ணி ரயில் நிலையங்களில் கூட்டம்‌ கூடினால் அது மேலும் பிரச்சினைகளுக்கு வழி வகுத்து விடும் என்பதாலும், மாநிலங்களுக்கும் இதில் பங்கு கொண்ட‌ ஒரு‌ பொறுப்பு, திருப்தி இருக்க வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் சிறப்பான செயல்பாடு எங்கே‌ மக்களிடம்‌ நல்ல பெயர்‌ வாங்கித்‌ தந்துவிடுமோ என்று‌ பதறிப்போய் எதிர்க்கட்சிகள்‌ மத்திய அரசின் செயல்பாடுகளைப்‌ பற்றி‌ பொய்யான தகவல்களை பரப்ப வேண்டும் என்று யோசனை கூறிய சேகர் குப்தா தற்போது அவர் நடத்தி வரும் The Print இணைய ஊடகத்தையே‌ பொய்யும்‌ புரட்டும்‌ பரப்ப பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்.

Next Story