Top
undefined
Begin typing your search above and press return to search.

வேதபாட சாலை மாணவர்களுக்கு கொரோனா இல்லை - டெல்லி "தனியார்" மாநாட்டு சம்பவத்தை திசை திருப்ப திட்டமிட்டே பரவும் போலி செய்தி!

வேதபாட சாலை மாணவர்களுக்கு கொரோனா இல்லை - டெல்லி தனியார் மாநாட்டு சம்பவத்தை திசை திருப்ப திட்டமிட்டே பரவும் போலி செய்தி!

MuruganandhamBy : Muruganandham

  |  10 April 2020 12:26 PM GMT

திருமலையில் உள்ள வேதபாட சாலையில் தங்கி படிக்கும் 5 மாணவர்களுக்கு கொரோனா உள்ளதாக ஒரு பொய் செய்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அது திட்டமிட்டே பரப்பப்பட்டு வரும் போலி செய்தி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநாடு குறித்த செய்திகளை திசை திருப்பும் நோக்கில், இவ்வாறு திரித்து வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த பாட சாலையில் 470 பேர் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்பதியில் உள்ள சிம்ஸ் தேவஸ்தான மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், இவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவி வெளியிட்ட தகவலில், ''வேதபாட சாலையில் படிக்கும் மாணவர்கள் ஏற்கெனவே அரசு நிபந்தனைகளின்படி தனித்தனியாக தங்கி படித்து வந்தனர். இவர்களின் சொந்த ஊர் வெகு தூரம் என்பதாலும், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதாலும் இவர்கள் திருமலையிலேயே தங்கி உள்ளனர்.

தற்போது 5 மாணவர்களுக்கும் கரோனா தொற்று இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தனித்தனியாக வேறொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' என கூறினார்.

Next Story