Top
undefined
Begin typing your search above and press return to search.

மாஸ்டர் இசை வெளியீட்டில் விஜய் கூறியதாக பொய்யான செய்தியை பரப்பும் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்!

மாஸ்டர் இசை வெளியீட்டில் விஜய் கூறியதாக பொய்யான செய்தியை பரப்பும் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்!

Praveen KumarBy : Praveen Kumar

  |  16 March 2020 7:37 AM GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா, சாந்தனு உட்பட பலர் நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பேசாத கருத்தை பேசியதாக சில ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர் என கூறப்படுகிறது.

"மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கி விட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது" என்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடிகர் விஜய் பேசியதாக சில ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஆனால், இந்த கருத்தை நடிகர் விஜய் தெரிவிக்கவில்லை என விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டவர்களும் நடிகர் விஜய் இது போன்ற கருத்தை தெரிவிக்கவில்லை என உறுதிப்படுத்தி உள்ளனர்.

Next Story