Top
undefined
Begin typing your search above and press return to search.

ட்ரம்ப் வருகைக்காக குடிசை பகுதி சுவர் வைத்து மறைக்கப்படுகிறதா.? பரவும் போலி செய்தி - வைரலாகும் பதிவின் உண்மை பின்னணி!

ட்ரம்ப் வருகைக்காக குடிசை பகுதி சுவர் வைத்து மறைக்கப்படுகிறதா.? பரவும் போலி செய்தி - வைரலாகும் பதிவின் உண்மை பின்னணி!

MuruganandhamBy : Muruganandham

  |  16 Feb 2020 3:09 AM GMT

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வருகையையொட்டி, குஜராத்தில் உள்ள குடிசைப் பகுதியை மறைத்து சுவர் எழுப்பப்படுவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அரசு முறைப் பயணமாக வருகிற 24 ஆம் தேதி இந்தியா வருகிறார். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். வல்லபாய் படேல் மைதானத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக, விமான நிலையத்தில் இருந்து மைதானத்துக்கு செல்லும் வழி, அழகு படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளை மறைக்க, சுவர் ஒன்று எழுப்பப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்து, அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நகராட்சி ஆணையர், அந்த பகுதியில் சுவர் கட்டப்பட வேண்டும் என்பது 2 மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு என கூறியுள்ளார்.

இதற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story