Top
undefined
Begin typing your search above and press return to search.

புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவ வங்கிகளுக்கு உத்தரவு - கடனாகவோ அல்லது நிதியுதவியாகவோ பெறலாம் என நிதியமைச்சர் தகவல்.!

புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவ வங்கிகளுக்கு உத்தரவு - கடனாகவோ அல்லது நிதியுதவியாகவோ பெறலாம் என நிதியமைச்சர் தகவல்.!

R SubbaiahBy : R Subbaiah

  |  22 May 2020 1:04 PM GMT

புலம்பெயரும் வடமாநில தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ரூ.3 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து எழுந்துள்ளன. இந்த கோரிக்கைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். ஆனால், நான் அப்போது கூறிய பதிலையே தற்போதும் கூற விரும்புகிறேன். அவர்களுக்கு போதுமான நிதியுதவிகளை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

அவர்கள் வங்கிகளுக்கு சென்று கேட்காமல், எங்களையே கேட்டுக்கொண்டிருப்பது எவ்விதத்தில் நியாயம். வங்கிகளுக்கு சென்று அவர்களுக்கு தேவையான தொகையை நிதியுதவியாகவோ அல்லது கடனாகவோ அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்குமேல் மத்திய அரசால் என்ன செய்ய முடியும்?.

அத்தியாவசியம் அல்லாத செலவுகளை கட்டுப்படுத்துவதில் மிகுந்த அக்கறை மேற்கொண்டுள்ளோம். தற்போது நாங்கள் பொருளாதார சீரமைப்பிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அறிவிப்புக்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் படிப்படியாக துவக்கிவிட்டோம். இந்த நடவடிக்கைகளை நிதித்துறை மிக உன்னிப்பாக கவனிப்பது மட்டுமல்லாமல் செயல்படுத்தியும் வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

indianexpress.com/india/nirmala-sitharamancorona-virus-lockdown-reserve-bank-of-indiamonetization-gdp-liquidity-192555/

Next Story