Top
undefined
Begin typing your search above and press return to search.

கலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.!

கலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.!

Raghavan VBy : Raghavan V

  |  29 May 2020 9:32 AM GMT

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு இன்று (மே 29) இந்திய தொழில்கள் சங்கம் (IIA), தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) போன்ற தொழில்துறை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதன் மூலமாக வேலையின்மையாலும் புலம்பெயர்வதை தடுக்கவும் மாநிலத்தில் சுமார் 9.5 லட்சம் தொழிலாளர்கள் வேலைவைப்பு வழங்க இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.

அந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய தொழில்கள் சங்கம் (ஐ.ஐ.ஏ) மற்றும் நாரெட்கோ ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7.5 லட்சம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதாக உறுதியளித்துள்ளன.

இதன் விளைவாக இந்திய தொழில்கள் சங்கம் (ஐ.ஐ.ஏ), சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் (MSME), தொழிலாளர் துறை மற்றும் தொழில்துறை இயக்குநரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு பணிக்குழுவை உருவாக்க முயல்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த ஒப்பந்ததிற்கு முன்னராகவே, சில தினங்களுக்கு முன்பு கூறியதுபோல, 14.75 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறன் வரைபடத்தை யோகி அரசு ஏற்கனவே பூர்த்தி செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. மேலும், தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் வேலைகள் செய்யவும் மற்றும் அவர்களின் பாதுகாப்பைக் குறித்தும் யோகி அரசாங்கம் ஒரு புலம்பெயர்ந்த ஆணையத்தையும் அமைத்துள்ளது.

Next Story