Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆந்திராவை உலுக்கும் கோவில் பண கையாடல் விவகாரம் - நடந்தது என்ன?

ஆந்திராவை உலுக்கும் கோவில் பண கையாடல் விவகாரம் - நடந்தது என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 May 2020 3:05 PM GMT

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பக்தர்கள் தானமாக எழுதி கொடுத்த நிலங்களை விற்க எடுத்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஆந்திர அரசு மற்றும்ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளது இந்த முறை கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் சிவன் கோயிலின் ஒரு கோடி அளவிலான பணத்தை கையாடல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது இதில் ஆந்திரா வங்கியை சேர்ந்த பதினான்கு அதிகாரிகளும் ஸ்டேட் வங்கியைச் சேர்ந்த 6 அதிகாரிகளும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ சைலத்தில் உள்ள பிரம்மாரம்ப மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவிலுக்குச் செல்ல வேண்டிய நிதியைப் பற்றி கோவில் தேவஸ்தான ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போது இது தெரிய வந்தது. விற்கப்பட்ட பூஜைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் அவற்றால் வந்த வரவும் பொருந்திப் போகவில்லை என புகார் வந்ததால் விசாரணை செய்யப்பட்டது.

2017லிருந்து கிட்டத்தட்ட ₹ 1.42 கோடி அளவிலான பணம் ஆந்திர வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி அலுவலர்கள் 20 பேரால் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்று ‌டிஎஸ்பி வெங்கட்ராவ் தெரிவித்தார். ஆந்திர வங்கி அலுவலர்கள் ₹ 76 லட்சத்தைக் கையாடல் செய்த நிலையில் எஸ்பிஐ வங்கி மூலம் ₹ 66 லட்சம் பணம்‌ திருடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆந்திர வங்கி ஊழியர்களுக்கு ஊதியம்‌ மாதமாதம்‌ வழங்கப்பட்ட நிலையில் எஸ்பிஐ ஊழியர்களுக்கு அவ்வாறு தரப்படவில்லை. பூஜைகள் ‌மற்றும் ஓய்வறையில் தங்குவதற்கு டிக்கெட் விற்கும்‌ தேவஸ்தான கவுன்டர்கள் பக்தர்களுக்கு உதவும் விதமாக வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்டதை பயன்படுத்திக் கொண்டு வங்கி ஊழியர்கள் கையாடல் செய்ததாக கோவில் செயல் அலுவலர் கே எஸ் ராமராவ் கூறினார். டிக்கெட் வழங்கும் ‌மென்பொருளை திருத்தி போலி வங்கிக் கணக்குகளைத்‌ துவக்கி அவற்றுக்கு பணத்தை அனுப்பி கையாடல் செய்ததாக ‌முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் 50000 கோவில் பணம் கையாளும் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது பூஜைகளுக்கும் விருந்தினர் அறைகளுக்கும் பதிவு செய்த பக்தர்கள் யாரும் பாதிக்கப்படாததால் இதைப்பற்றி இதுவரை தெரியாமல் இருந்துள்ளது. சில பக்தர்களின் பதிவுகள் அழிக்கப்பட்டுமாறு மென்பொருள் திருத்தப்பட்டதால் இதைப்பற்றி வெளியில் தெரிய வாய்ப்பில்லாமல் போயுள்ளது. பூஜை செய்யப்பட்டு, அறைகளை காலி செய்த பின்னரே பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அழிக்கப்பட்ட பதிவுகள் கணினியிலிருந்து மறைந்ததால் கோவில் கணக்குகளில் வரவில்லை பணமும் போலி வங்கி கணக்குகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அவர்கள் மென்பொருள் நிபுணர்களின் உதவியை நாடி இருக்கக்கூடும் என்றும் சுப தினங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்த நாட்களில் கையாடல் செய்திருக்கக்கூடும் என்றும் கருதுவதாக அவன் செயல் அலுவலர் கூறினார். ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் வெல்லம்பள்ளி ஸ்ரீநிவாச ராவ் ஏ பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைககவும் கையாடல் செய்யப்பட்ட பணத்தை மீட்குமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கோவில் அதிகாரிகள் ஸ்ரீசைலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஜோதிர்லிங்க தலம்

ஸ்ரீ பிரம்மாரம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோவில் கர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் நல்லமலைத் தொடரின் பின்னணியில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த தலம். இது பொதுவாக ஸ்ரீசைலம் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி மூர்த்தி பாரதத்தில் இருக்கும் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று பிரம்மரம்ப தேவி மூர்த்தி 18 மகா சக்திகளில் ஒன்று இருவருமே சுயம்பு லிங்கங்கள் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு ஜ்யோதிர்லிங்கம் ஓம் மஹா சக்தியை ஒரே கோவிலில் இணைந்து இருப்பது இந்த தலத்தின் சிறப்பு இதுபோல் நாட்டில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 12 மற்றும் 16 வது நூற்றாண்டுகளில் இடையே தோன்றிய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சந்திரகுப்த நகரா வழியாக ஸ்கந்த புராணத்திலும் இந்த கோவில் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீராமரும் சீதா தேவியும் வனவாசத்தின்போது இந்த கோவிலில் வழிபட்டு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்ததாக வழங்கப்படுகிறது.

நன்றி : ஸ்வராஜ்யா

Next Story