Top
undefined
Begin typing your search above and press return to search.

'கேரளாவை பார்த்து தமிழகம் கற்க வேண்டும்' என்று கூறிய கமலஹாசனுக்கு ஆவி பறக்க சூடு வைத்த கேரள பெண் அமைச்சர் - விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்.!

R SubbaiahBy : R Subbaiah

  |  2 Jun 2020 12:21 AM GMT

மக்கள் நீதி மையம் கட்சியின் மையம் டாக்ஸ் நிகழ்ச்சியில் கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜாவுடன் கமலஹாசன் உரையாடல் செய்தார். அப்போது தமிழக அரசை மட்டம் தட்டும் நோக்கத்தில் தமிழகம் சிறப்பாக இல்லை. அது கேரளாவைப் பார்த்து இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும், குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும் என எந்த வித புள்ளிவிபரமும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக பேசினார்.

ஆனால் விவரம் இல்லாமல் பேசும் கமலஹசனை புரிந்து கொண்ட ஷைலஜா அதற்கு பதில் அளிக்கையில் " நீங்கள் சொல்லும்படி எல்லாம் தமிழ் நாடு இல்லை, அங்கும் சிறப்பான பொது சுகாதார அமைப்பு உள்ளது, தமிழகமும் கொரோனா பரவலை நன்றாக கட்டுப் படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என முகத்தில் அடித்தது போல் கூறியதும் கமலஹாசன் மேற்கொண்டு பேச முடியாமல் பம்மினார்.

https://www.facebook.com/100002810874795/videos/2387498761353796/


இந்த நிகழ்ச்சியை பார்த்த அவருடைய ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் உண்மையில் கமலின் அரசியல் அறிவு மேல் சந்தேகம் ஏற்பட்டது. தமிழக நெட்டின்கள் சும்மா விடுவார்களா ?

ஒரு ரசிகர் "தலைவா இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது நாம.. பழையபடி பருத்திக் கொட்டை குடவுன்லேயே இருந்திருக்கலாம் வாங்க என தமாஷ் செய்துள்ளார்.

இன்னொரு நெட்டிசன் கமல் ஒரு வேறு மாநில சுகாதார அமைச்சருடன் பேசுகையில் அவரிடமிருந்து கொரோனா கட்டுப்பாடு குறித்த கருத்துக்களை கேட்பதை விட்டு விட்டு நாம் இருக்கும் இடத்தை குறை கூறி இருக்க கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

மற்ற பல நெட்டிசன்கள் பேசாம இவர கடைய மூடிட்டு போக சொல்லுங்கள் என்றும், ஒன்பது ரூபாய் நோட்டு என்றும், கமலுக்கு மூக்குடைப்பு என்றும், அசிங்கப்பட்டான் அல்லேலூயா' என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story