Top
undefined
Begin typing your search above and press return to search.

"காஷ்மீரை சேராத யாரும் அங்கே குடியேற வந்தால் கொன்று விடுவோம்" - பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு பகிரங்க எச்சரிக்கை.!

"காஷ்மீரை சேராத யாரும் அங்கே குடியேற வந்தால் கொன்று விடுவோம்" - பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு பகிரங்க எச்சரிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Jun 2020 5:35 PM GMT

பாக்கிஸ்தானின் புதிய பயங்கரவாத அமைப்பு 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' (TRF) காஷ்மீரைச் சேராத இந்தியக் குடிமக்கள் அங்கே குடியேறினால் அவர்களைக் கொன்று விடத் திட்டமிட்டுள்ளதாக அச்சுறுத்தியுள்ளது.


'தளபதி ஹம்சா' என்றவன் கையெழுத்திட்ட பயங்கரவாத அமைப்பின் துண்டுப்பிரதியை பத்திரிகையாளர் ஆர்த்தி டிக்கூ சிங் பகிர்ந்து கொண்டார், அதில் அவர்கள் இயக்கம் போர் வீரர்கள் அல்லாத எந்தவொரு இன/மத/கலாச்சார மக்களையும் காயப்படுத்தாது எனவும் ஆனால் அது பாஜகவின் சதியால் ஏமாற்றப்படாது என்றும் பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் காஷ்மீரின் மக்கள்தொகையை மாற்ற முயற்சிப்பதாகவும், 'ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளை' ' பொதுமக்கள் என்ற போர்வையில்' காஷ்மீரில் குடியேற்ற விரும்புவதாகவும் அந்த துண்டுப்பிரசுரம் குற்றம் சாட்டியது.

எனவே, காஷ்மீரை சேராத யாரும் அங்கு குடியேற வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்தால் ஒரு 'RSS உளவாளியாக ' கருதப்படுவார்கள், மற்றும் அவர்கள் 'சரியான முறையில் கையாளப்படுவார்கள்' என்றும் அந்த பயங்கரவாதக் குழு பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இந்துஸ்தான் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட இந்த புதிய பயங்கரவாத அமைப்பை, உளவு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன, இது பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தைபாவின் (LeT ) மூன்று உயர் தலைவர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 370 வது பிரிவை ரத்து செய்த பின்னர் TRF கடந்த ஆண்டு பிற்பகுதியில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, லஷ்கர் தலைவர்கள் குழுவின் மையத்தை உருவாக்கி பாகிஸ்தானில் இருந்து கையாண்டனர். பாதுகாப்பு அறிக்கையில் தெற்கு காஷ்மீருக்கான சஜாத் ஜாட், மத்திய காஷ்மீருக்கு காலித் மற்றும் வடக்கு காஷ்மீருக்கான ஹன்சலா அட்னான் ஆகியோர் தலைவர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது.

Next Story