Top
undefined
Begin typing your search above and press return to search.

இன்றைய மோடி இந்தியாவுடன் போரிட நினைத்தால் மூக்கு நிச்சயம் உடைபடும் - சீனாவுக்கு அந்நாட்டு உள்ளூர் பத்திரிக்கை அட்வைஸ்.!

இன்றைய மோடி இந்தியாவுடன் போரிட நினைத்தால் மூக்கு நிச்சயம் உடைபடும் - சீனாவுக்கு அந்நாட்டு உள்ளூர் பத்திரிக்கை அட்வைஸ்.!

R SubbaiahBy : R Subbaiah

  |  3 Jun 2020 6:41 AM GMT

இப்போதைய இந்தியா 1962 கால (நேரு கால) இந்தியா அல்ல, இது மோடி கால இந்தியா( 1920 ), இப்போது முன்பைவிட இந்தியாவில் தேசிய உணர்வு எழுச்சி பெருகி இருப்பதாகவும், மோடி ஒரு முடிவெடுத்தால் நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு சீன பொருளாதாரத்தை நசுக்கும் வகையில் நம் நாட்டு பொருள்களை பகிஷ்கரிப்பார்கள் என்றும், மேலும் இந்தியாவின் படை வலிமை பல மடங்கு இப்போது பெருகியுள்ளதால் இந்தியா விஷயத்தில் போர் தொடர்பன முடிவு எதையும் சிந்திக்கக் கூடாது என்றும் சீன நாட்டு உள்ளூர் பத்திரிகைகள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சீனாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. தீர்க்க முடியாத பிரச்சினையால் 1962 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்குமிடையே போர் ஏற்பட்டது. இந்த போரால் இந்தியாவுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டன. இழந்த பொருளாதாரத்தை திரும்ப பெற மீண்டும் 10 ஆண்டுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே தலாய்லாமா தொடர்பான பிரச்சினைகள் தற்போது ஓய்ந்திருந்தாலும் சென்ற 2017 ஆம் ஆண்டு மீண்டும் அருணாச்சலப் பிரதேசம்- லடாக் இடையிலான டோக்லாம் எல்லையில் பிரச்சினைகள் ஏற்பட்டு பிறகு இந்தியாவின் ராஜதந்திர பேச்சுக்கள் மற்றும் மோடி அரசின் அணுகுமுறைகளை அடுத்து சீன படைகள் பின்வாங்கின. இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றன.

இந்த நிலையில், கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று கூறி அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வாணிபத்துக்கும் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வெறியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளிடையே சீன எதிர்ப்பு நாடுகளை அணிவகுத்து வருகிறார். கொரோனா வைரஸ் திட்டமிட்டு சீனாவால் பரப்பப்பட்ட ஓன்று என வெளிப்படையாக கூறுகிறார். இதற்கு பல ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவித்தாலும் இந்தியா இது குறித்து வெளிப்படையாக எதையும் இது வரை கூறவில்லை.

ஆனால் அமெரிக்க அதிபருக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே நாளுக்கு நாள் நெருங்கிய நட்பு பெருகி வருவதாகவும், சீனாவை தனிமைப் படுத்தும் முயற்சியில் அமெரிக்காவுக்கு இந்தியா துணை போகலாம் என்றும் அவ்வாறு போனால் இந்தியா 1962 போரை விட மோசமான பாடங்களை சந்திக்கும் என சீனாவுக்கு ஆதரவாக Global Times பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

அதனால்தான் இந்தியாவை அமெரிக்கா பக்கம் சாயக் கூடாது என மறைமுகமாக எச்சரிக்கும் பொருட்டு சீனா மேலும் சில நவீன பீரங்கி படைகளையும், தளவாடங்களையும் சர்ச்சைக்குரிய எல்லை பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஏராளமான சீன ஜெட் போர் விமானங்கள் எல்லைபகுதியில் தாழப்பறந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இப்போதைய இந்தியா 1962 கால (நேரு கால) இந்தியா அல்ல, இது மோடி கால இந்தியா( 1920 ), இப்போது முன்பைவிட இந்தியாவில் தேசிய உணர்வு எழுச்சி பெருகி இருப்பதாகவும், மோடி ஒரு முடிவெடுத்தால் நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு சீன பொருளாதாரத்தை நசுக்கும் வகையில் அவர்களின் 80 சதவீத பொருள்களை பகிஷ்கரிப்பார்கள் மேலும் இந்தியாவின் படை வலிமை பல மடங்கு பெருகியுள்ளது. குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தின் பெரும் பகுதி இந்தியாவின் வசம் உள்ளது. வலிமையான கடற்படையின் கீழ் அது உள்ளது.

இந்தியா நினைத்தால் அரபு நாடுகளில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக கப்பல் கப்பலாக தென் சீன பகுதியான மலாக்கா செல்லும் எண்ணெய் கப்பல்களை இந்திய பெருங்கடல் கடற்பகுதிகளில் தடுத்து நிறுத்தி தாக்குதல் தொடுக்க வாய்ப்புண்டு. மேலும் சீனாவின் வணிக கப்பல்களையும் நாசம் செய்யும். இதனால் சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதிகள் மற்றும் பொருளாதாரம் கிட்டத்தட்ட 80 சதவீதவீதம் பாதிக்கப்படும். ஏனெனில் சீன ஏற்றுமதி இறக்குமதிகள் இப்போது மலாக்கா வழியையே நம்பியுள்ளது. மேலும் இப்போது இந்தியா சீன எல்லையோரம் முழுவதும் பலமான அகன்ற சாலை போக்குவரத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தியா நிறுவியுள்ளது.

இதன் மூலம் தங்கள் தரைப்படை பலத்தை காட்ட மிகுந்த வாய்ப்புகள் உள்ளதாகவும், மேலும் லடாக் மற்றும் திபெத்திய உச்சி பகுதிகளில் இந்திய விமானப்படை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதால் எத்தகைய தாக்குதல்களையும் இந்தியா தொடுக்கும் என்றும், அவசியம் ஏற்பட்டால் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு உதவும் நிலையில் சீனா மீண்டும் எழுந்திருக்க முடியாத நிலையில் மூக்கு உடைபடும் எனவும் சில சீன உள்நாட்டு பத்திரிகைகள் அந்த நாட்டை எச்சரித்து வருவதாகவும் ஆங்கிலப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

https://tfipost.com/2020/06/india-dont-dare-join-the-usa-china-is-openly-threatening-india-with-fighter-jets-but-we-al-know-what-happened-at-doklam

Next Story