Top
undefined
Begin typing your search above and press return to search.

தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கூறிய ஆதாரமில்லா தகவல் - நெட்டிசன்கள் கலாய்!

தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கூறிய ஆதாரமில்லா தகவல் - நெட்டிசன்கள் கலாய்!

Mohan RajBy : Mohan Raj

  |  8 Jun 2020 11:00 AM GMT

News 18 தொலைக்காட்சியில் எடிட்டர் & விவாத நேரலை தொகுப்பாளராக பணியுரியும் செந்தில் தனது ட்விட்டர் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார், அதில்

"சவுதியில் இருந்து நண்பர் அழைத்திருந்தார். அருகில் உள்ள எந்த மருத்துவமனையிலும் ( தனியாராக இருந்தாலும் ) கொரோனா சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் முற்றிலும் இலவசம். சிகிச்சை முடிந்து திரும்பும் போது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30,000 பணமும் கொடுத்து அனுப்பி வைக்கிறார்களாம்."


இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், அதாவது எந்த ஆதாரமும் இல்லாமல் எந்த ஒரு செய்தியையும் குறிப்பிடாமல் ஒரு நாட்டில் இவ்வாறு நடக்கிறது என செய்தியை திரிக்க முயன்றுள்ளார் மேலும் இந்தியா போன்று தேசத்தில் அதுவும் உலக நாடுகள் கொரோனோ பாதிப்பில் செயல்பட்டதை விட மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு மற்ற நாடுகளுக்கு உதவி செய்யும் நிலையிலுள்ள இந்திய அரசை சுட்டிக்காட்டி குறிப்பிடுவது போல் அந்த செய்தி இருந்தது. மேலும் அதற்க்கு பதிலளித்த நெட்டிசன்கள் அவரை "உமக்கு இந்த வேலை தேவையா என்கிற ரேஞ்சில் துளைத்து எடுத்துவிட்டனர்.


குறிப்பாக தமிழகத்தில் மற்ற நாடுகளின் அரசோ, அதிபரோ செய்யும் விஷயங்களை பாராட்டும் மனப்பாங்கு ஏனோ மோடி அரசாங்கம் செய்தால் மட்டும் வருவதில்லை. இதில் ஊடகத்துறையின் பணிபுரியும் பெரும்பாலனோர் நிலைப்பாடும் அதுதான் குறிப்பாக அரசின் குறைபாடுகளை மக்களிடம் பூதாகரமாக்கும் வேலையை அதிவேகமாக செயல்படுவதுபோல் நல்ல விஷயங்களை எடுத்து சொல்வதில் மிகுந்த அலட்சியம் தெரிகின்றன. ஊடகம் என்பது நடுநிலையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



Next Story