Top
undefined
Begin typing your search above and press return to search.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவானுக்கு கொரனா தொற்று உறுதி.!

மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவானுக்கு  கொரனா தொற்று உறுதி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 May 2020 9:14 AM GMT

50,231 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது காங்கிரஸின் மூத்த தலைவரும் உத்தவ் தாக்கரே அரசின் பொதுப்பணித் துறை அமைச்சருமான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. IANS செய்தி நிறுவனத்துக்கு கிடைத்த தகவலின் படி அவரது சொந்த ஊரான நந்தெட் மற்றும் மும்பை இடையே அடிக்கடி பயணித்து வந்ததாகவும் அதன் மூலம் தோற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அவருக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மகாராஷ்டிர அமைச்சரவையில் ‌கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, வீட்டுவசதித் துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஜிதேந்திர அவ்ஹத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Next Story