Top
undefined
Begin typing your search above and press return to search.

காட்மேன் வெப் சீரிஸ் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு.!

காட்மேன் வெப் சீரிஸ் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Jun 2020 11:05 AM GMT

இந்து மதத்தையும் ஆன்மீகப் பெரியோர்களையும்‌ அவமதிக்கும்‌ வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்ட Zee5ன் காட்மேன் தொடருக்கு கடும்‌ எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அதன்‌ டீசர் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும் தொடர் திட்டமிட்டபடி எடுக்கப்படும்‌ என்று படக்குழு கூறிய நிலையில் தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பிராமண சமூகத்தைச் சேர்ந்த மதத் தலைவராக இருக்கும் ஒருவர் கைது செய்யப்படுவது போலவும் அவர் பிராமணனாக்கி காட்டுவதாகக் கூறும் மற்றொருவர் குடிகாரனாகவும், பெண்பித்தனாகவும், திருடனாகவும் இருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதை எதிர்த்து சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் காஞ்சி மடத்திலிருந்து இதைப்பற்றி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் பேசியதாகவும் அதனை எடுத்து ஜீ குழும தலைவர் சுபாஷ் சந்திராவிடம் சுவாமி பேசியபோது தொடரை ரத்து செய்வதாக அவர் உறுதி அளித்ததாகவும் சுப்பிரமணிய சுவாமியின் உதவியாளர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜீ குழுமத்தை நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சென்சார் செய்யும் ஐபிஃப்(Indian Broadcasting Foundation) அமைப்புக்கு புகார்களும் அனுப்பப்பட்டன. மேலும் இந்து மக்கள் கட்சி சென்னையில் உள்ள ஜீ தொலைக்காட்சி அலுவலகத்திற்கு முன் சமூக இடைவெளியை பின்பற்றி ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காட்மேன் தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்து ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Next Story