Top
undefined
Begin typing your search above and press return to search.

பூடான் நிலத்துக்கு திடீரென உரிமை கொண்டாடிய சீனா : பன்னாட்டு கவுன்சிலில் இந்தியா உதவியுடன் மூக்கை அறுத்த பூடான்.!

பூடான் நிலத்துக்கு திடீரென உரிமை கொண்டாடிய சீனா : பன்னாட்டு கவுன்சிலில் இந்தியா உதவியுடன் மூக்கை அறுத்த பூடான்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jun 2020 3:30 AM GMT

தென் சீனக் கடலில் இருந்து லடாக் வரை சொந்தம் கொண்டாடி வரும் சீனா இப்போது பூட்டானில் உள்ள ஒரு புதிய நிலத்திற்கு உரிமை கோரியுள்ளது. பன்னாட்டு சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின் 58 வது கூட்டத்தில், பூட்டானில் உள்ள சாகடெங் வனவிலங்கு சரணாலயத்தின் நிலம் "சர்ச்சைக்குரியது" என்று சீனா சமீபத்தில் விவரித்ததுடன், இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை எதிர்த்தது..

சீனாவின் இந்த நடவடிக்கையை பூடான் கடுமையாக எதிர்த்ததுடன், "சாகடெங் வனவிலங்கு சரணாலயம் பூட்டானின் ஒருங்கிணைந்த மற்றும் இறையாண்மை கொண்ட பகுதியாகும்." எனவும் கூறியது.

சீனாவின் கூற்றுக்கு மாறாக, முந்தைய காலத்தில் சரணாலயம் நிலம் தொடர்பாக ஒருபோதும் சர்ச்சை ஏற்படவில்லை, சீனாவும் இது தொடர்பாக பேசியதில்லை.

சீனாவின் மேற்கண்ட கூற்றை பூட்டான் ஆட்சேபித்தது, ஊடக அறிக்கையின்படி, இந்த முழு சர்ச்சையிலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த வனவிலங்கு சரணாலயத்துக்கு இதுவரை உலக அளவில் எந்த நிதி உதவியும் பெற்றதில்லை.

இந்த சரணாலயத்திற்கு முதன்முறையாக உலக சுற்றுச்சூழல் கவுன்சில் பணம் கொடுக்க வந்தபோது, சீனா அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நிலத்தில் தனது கோரிக்கையை வைத்தது. சீனாவின் எதிர்ப்பிற்குப் பிறகும் இந்த திட்டத்திற்கு சபை ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது..

உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலில் சீனாவுக்கு ஒரு பிரதிநிதி இருக்கிறார். ஆனால் பூட்டானுக்கு நேரடி பிரதிநிதி இல்லை. உலக வங்கியில் பூட்டான் நாட்டை இந்தியாவின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அபர்ணா சுப்பிரமணி பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இவர் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாட்டிற்கான பிரதிநிதி பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ஆதரவில் பூடான் தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தது. பூடானின் திடீர் ஆக்ரோஷத்தை கண்ட சீனா பின்னால் இருப்பது இந்தியா என்றதும் அடக்கி வாசித்தது

https://www.indiatoday.in/world/story/china-now-lays-claim-on-bhutan-s-territory-thimphu-counters-beijing-s-move-1695276-2020-06-29

Next Story