Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்துக்கள் மட்டுமே வாழும் கிராமத்தில் சட்டவிரோதமாக சர்ச் கட்டும் மதமாற்றிகளின் அட்டகாசம் - அதிகாரிகள் செவிமடுக்காத அவலம்!

இந்துக்கள் மட்டுமே வாழும் கிராமத்தில் சட்டவிரோதமாக சர்ச் கட்டும் மதமாற்றிகளின் அட்டகாசம் - அதிகாரிகள் செவிமடுக்காத அவலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 July 2020 3:30 PM GMT

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் சிறு சிறு தொழில்கள் செய்து பிழைக்கும் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு சர்ச் கட்ட படுவதாக செய்தி வெளியாகியது. இது தொடர்பாக சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் தேசிய பழங்குடியினர் ஆணையத்திடமும் கடப்பா மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரியது.

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகும் நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள இந்து குடும்பங்கள் மட்டுமே வாழும் மூலஸ்தானம் அக்ரஹாரம் என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக ஒரு சர்ச் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டட வேலை தொடங்கியவுடனேயே கிராமத்தார் அது சட்டவிரோதமானது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்துக்கள் மட்டுமே வாழும் கிராமத்தில் இவ்வாறு சர்ச் கட்டுவது சமூக அமைதிக்கும் ஒழுங்கும் குந்தகம் விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளனர். எனினும் வழக்கம்போல் மத மாற்றிகள் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவிமடுக்காமல் கட்டிட பணியை தொடர்ந்துள்ளனர்.

எனவே கிராம மக்கள் பஞ்சாயத்து மற்றும் காவல்துறையை அணுக முடிவு செய்தனர். இதன்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்தனர். இதற்கு கிடைத்த பதிலில் சர்ச் கட்ட எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஆந்திர கிராம வளர்ச்சித் துறை ஆகியவற்றின் உத்தரவுபடி அருகாமையில் உள்ளவர்கள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்திலும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து தேவையான அனுமதியை பெற்ற பின்னுமே ஒரு வழிபாட்டு தலத்தை புதிதாக கட்ட முடியும் என்று விதி உள்ளது.

எந்த அனுமதியையும் பெறாமல் சர்ச் கட்டுமான வேலையைத் தொடர்ந்ததோடு கிராமத்தாரின் ஆட்சேபனையையும் சர்ச் உரிமையாளர்கள் மதிக்கவில்லை. இதனால் கிராமத்தார் கிராம வருவாய் அதிகாரியை மட்டுமல்லாது மண்டல வருவாய் அதிகாரியையும் மாவட்ட ஆட்சியரையும் கூட சர்ச் கட்டுமானத்தை நிறுத்துமாறு கோரி அணுகியுள்ளனர். ஆனால் நடந்தது என்னவோ இவர்கள் எவரும் இந்த பிரச்சனையில் தலையிடாததோடு உள்ளூர் காவல் துறையினர் புகார் அளித்ததற்காக இந்துக்களை துன்புறுத்தத் தொடங்கினர்.

அதிகாரத்தில் உள்ள எவரும் தங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்காததால் சட்டவிரோத சர்ச்சின் கட்டுமானத்தை நிறுத்துமாறு உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். எனினும் இதனால் உள்ளூர் காவலர்களின் துன்புறுத்தல் மேலும் அதிகரித்தது. அடிக்கடி காவல் நிலையத்திற்கு அழைத்து போராட்டத்தை நிறுத்தாவிட்டால் குற்ற வழக்குகளை பதிவு செய்து விடுவோம் என்று காவல்துறையினர் இந்துக்களை மிரட்டியுள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகள் தான் இப்படி இருக்கிறார்கள் என்று மனம் தளராமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து நீதியை நிலைநாட்டுமாறு மூலஸ்தான அக்ரஹார மக்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அங்கேயும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இனி வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் என்ன செய்வது என்றும் அழியாமல் இறுதியாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கிராம மக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

முழு பிரச்சனையும் விளக்கி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கிராமமக்கள் எழுதியுள்ள கடிதத்தில் "உள்ளூர் நிர்வாகமும் சரி மாவட்ட அளவிலான அதிகாரிகளும் சரி எங்களது குறைகளை கேட்டு அறியாமல் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க முயலாமல் எங்களை இரண்டாம் தரக் குடிமக்களைப் போல் நடத்துவதோடு எங்களது பிரச்சனைகளை பற்றி குரல் எழுப்பினால் அச்சுறுத்தி வேறு நாட்டில் இருந்து வந்து குடியேறிய அகதிகளை போல் எங்களை நடத்துகின்றனர்" என்று வேதனையுடன் விவரித்துள்ளனர்.

மேலும், "எங்களது புகாரை விசாரிக்க மேலும் எங்களது பிரச்சனைகளைப் பற்றி குரல் எழுப்பியதற்காக எங்களை குறிவைத்து துன்புறுத்துவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்படும் சம உரிமையை நசுக்குவதாகும்" என்று குறிப்பிட்டதோடு அச்சமின்றி அமைதியாக வாழும் அடிப்படை உரிமையே மறுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மதமாற்றிகளின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடந்து ஜகன் மோகன் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பதாக கருதப்படுகிறது.

நன்றி : Opindia

Next Story