Top
undefined
Begin typing your search above and press return to search.

மர்ம நபர்களால் அழிக்கப்பட்ட சிவன் சிலை - உத்தர பிரதேச மாவட்ட கிராமத்தில் பதற்றம்.!

மர்ம நபர்களால் அழிக்கப்பட்ட சிவன் சிலை - உத்தர பிரதேச மாவட்ட கிராமத்தில் பதற்றம்.!

VinithaBy : Vinitha

  |  9 Aug 2020 12:00 PM GMT

உத்திரபிரதேசத்தின் அசாம்கர் மாவட்டத்தில் அட்ராலியா காவல் நிலையத்தில் கீழ் உள்ள ஷெய்க்புரா கபிருதீன்பூர் கிராமத்தில் சிவன் கோவிலில் உள்ள சிவபெருமானின் சிலை மர்ம நபர்களால் அழிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிவன் கோவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கிராம சமாஜ் நிலத்தில் கிராம மக்களால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் பூசாரி இல்லாத காரணத்தினால் கிராம மக்களே கோவிலை பூட்டி திறக்கிறார்கள்.ஆனால் (ஜூலை-ஆகஸ்ட்) ஷ்ரவன் மாதத்தில் கோவிலில் ஒரு கண்காட்சி நடைபெறுவதால், இந்த காலகட்டத்தில் கோவில் பூட்டப்படவில்லை.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சில மர்மநபர்கள் வியாழக்கிழமை இரவு கோவிலுக்குள் நுழைந்து சிலையை அழித்தனர்.

அடுத்தநாள் இச்சம்பவம் நடந்த கோவில் அருகே ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். இச்சம்பவத்தை குறித்து போலீசில் புகார் தெரிவித்தனர்.பின்னர் மூத்த அதிகாரிகளுடன் போலீஸ் படை சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தடைந்தது. அதன் பிறகு கோபமடைந்த கிராமவாசிகள் உடன் பேசிய நிர்வாக அதிகாரிகள் சேதமடைந்த சிலைக்கு பதிலாக புதிய சிலை வழங்கப்படும் என்று கிராம மக்களுக்கும்,கிராம தலைவருக்கும் உறுதியளித்தனர்.

பின்னர் சமூக விரோத பிரிவினர் இப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறிய போலீசார் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராமங்களில் புதிய சிலை நிறுவப்படும் என்றும் கூறினார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராமத்தலைவர் மர்ம நபர்கள் மீது புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Next Story