Top
undefined
Begin typing your search above and press return to search.

உ பி: திருநங்கை சமூகத்தை மேம்படுத்த அவர்களுக்கென நலவாரியத்தை அமைக்க ஆதித்யநாத் அரசு முடிவு.!

உ பி: திருநங்கை சமூகத்தை மேம்படுத்த அவர்களுக்கென நலவாரியத்தை அமைக்க ஆதித்யநாத் அரசு முடிவு.!

JananiBy : Janani

  |  15 Sep 2020 11:59 AM GMT

உத்தரப் பிரதேசத்தில் திருநங்கைகளுக்கு பூர்விக சொத்து நிலங்களைக் கொடுக்கும் உரிமை பிறப்பித்த சில வாரங்களிலேயே சமூக நலத்துறையின் கீழ் திருநங்கைகளுக்கென நல வாரியத்தை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் மத்திய நிபுணர் குழுவிடமிருந்தும் உத்தரவைப் பெற்றுள்ளது.

மேலும் திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக, இந்த குழுவில் திருநங்கைகளும் மற்றும் சமூக நலத்துறையில் திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக பணிபுரியும் உறுப்பினர்களும் இடம்பெறுவர். இந்த குழுவானது திருநங்கைகள் மற்றும் அவர்களது சமூகத்தை மேம்படுத்துவதற்காகச் செயல்படும்.

இந்த குழு மாநிலத்தில் இருக்கும் திருநங்கைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கி, கல்வி நிலையங்களில் சேர்க்க மற்றும் மாநில அரசின் விடுதி மற்றும் வீட்டு நலவாரியத்தின் கீழ் தங்கும் வசதி உள்ளிட்டவை செய்துதரச் செயல்படும். இந்த குழுவை அமைக்க வேண்டும் என்ற UP கின்னார் பரிஷத்தின் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.

Next Story