Top
undefined
Begin typing your search above and press return to search.

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு நான்கு கோடிக்கும் மேல் உதவித்தொகை வழங்கியுள்ளதாக அமைச்சர் விளக்கம்.!

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு நான்கு கோடிக்கும் மேல் உதவித்தொகை வழங்கியுள்ளதாக அமைச்சர் விளக்கம்.!

JananiBy : Janani

  |  15 Sep 2020 3:55 PM GMT

கடந்த 2014-15 முதல் சிறுபான்மை சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 4 கோடிக்கும் மேல் உதவித்தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளதாகத் திங்களன்று மாநிலங்களவையில் மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். சிறுபான்மை சமூகமான புத்தர்கள், கிறிஸ்தவர்கள், ஜெய்ன்ஸ், முஸ்லீம்கள், பார்சிகள் மற்றும் சீக்கியர்கள் என ஆறு சமூகத்தினருக்கும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்படுத்த மத்திய சிறுபான்மை மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பல நலத்திட்டங்களை வழங்கியுள்ளது.

"சிறுபான்மை சமூகத்தில் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு 2014-15 முதல் இதுவரை 11,690.81 கோடி செலவில் மொத்தம் 4,00,06,080 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது," என்று அமைச்சர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். 2015-2016 முதல் 2019-20 வரை 3,06,19,546 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 9223.68 கோடி செலவில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 54 சதவீதம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2015-2016 முதல் 2019-2020 வரை சிறுபான்மை மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மொத்தம் 21160.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 19,201.45 கோடி அதாவது ஒதுக்கப்பட்ட நிதியில் 90.75 சதவீதம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

Next Story