Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் அமல்படுத்திய முழு ஊரடங்கு பயனுள்ளதாக அமைந்தது - ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் தகவல்.!

இந்தியாவில் அமல்படுத்திய முழு ஊரடங்கு பயனுள்ளதாக அமைந்தது - ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் தகவல்.!

Vignesh KBy : Vignesh K

  |  16 Sep 2020 5:43 AM GMT

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகயே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது. ரஷ்யா தான் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளதாக அண்மையில் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வீச துவங்கியுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் மருத்துவர் ரந்தீப் குலேரியா தெரிவித்து இருந்தார். அவருடைய கருத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவர் கூறியது; இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு பயன் அளித்ததாக தெரிவித்தார். இதன் பின்பு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த சமயத்தில் இறப்புகளும் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அப்போது இந்தியாவில் அதிக பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தான் உள்ளது எனவும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது இதற்காக தான் காரணம் எனவும் இந்தியாவில் ஊரடங்கு அமல்ப்படுத்தியது பயனளித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story