Top
undefined
Begin typing your search above and press return to search.

உ பி: அரசு காலிப்பணியிடங்களை அடுத்த மூன்று மாதத்திற்குள் நிரப்பும் முயற்சியில் யோகி ஆதித்யநாத் அரசு.!

உ பி: அரசு காலிப்பணியிடங்களை அடுத்த மூன்று மாதத்திற்குள் நிரப்பும் முயற்சியில் யோகி ஆதித்யநாத் அரசு.!

JananiBy : Janani

  |  18 Sep 2020 11:15 AM GMT

உத்தரப் பிரதேசத்தில் அரசுப்பணிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் ஒரு முயற்சியாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் காலியாக இருக்கும் பணியிடங்களின் விவரங்களைக் கேட்டுள்ளார்.

இந்த முடிவானது டெல்லியில் லோக் பவனில் அனைத்து தகவல் ஆணைய அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது. "இதுவரை மூன்று லட்ச இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, இதே போன்று அடுத்த மூன்று மாதத்தில் ஆட்கள் தேர்ந்தெடுப்பது ஆறு மாதத்திற்குள் அவர்களுக்கான பணிக்கான அதிகாரப் பூர்வ கடிதம் வழங்கப்பெறும்," என்று முதல்வர் யோகி தெரிவித்தார்.

"உ பி லோக் சேவா கமிஷன் நடத்திய வெளிப்படையான பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்ந்தெடுப்பது போன்றே, மற்ற பணியிடங்களும் நிரப்பப்படும்," என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை காவல்துறையில் 1,37,000 பணியிடங்களும் 50,000 ஆசியர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் மற்றும் மற்ற துறைகளிலும் 1,00,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் கூட 125 கோடி மக்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

Next Story