Top
undefined
Begin typing your search above and press return to search.

சமஸ்கிருத பள்ளிகளில் மதிய உணவு மற்றும் பிற வசதிகள்- யோகி உத்தரவு.!

சமஸ்கிருத பள்ளிகளில் மதிய உணவு மற்றும் பிற வசதிகள்- யோகி உத்தரவு.!

JananiBy : Janani

  |  17 Oct 2020 2:15 AM GMT

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் கல்வி நிலையங்கள், தொழில்துறைகள் மற்றும் பல்வேறு துறைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார். அவ்வாறு மாநிலத்தில் சமஸ்கிருதத்தை மேம்படுத்தும் ஒரு திட்டமாகச் சமஸ்கிருத பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி வியாழக்கிழமை அன்று உத்தரவிட்டார். மேலும் சமஸ்கிருத பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்கவும் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்தவும் அவர் கேட்டுக்கொண்டார்.



மத்யாமிக் சான்ஸ்க்ரிட் சிக்ஷா பரிஷத் என்ற வலைத்தளம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளார். இந்த அமைப்பானது தற்போதைய அரசு முயற்சியால் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதனையும் முதல்வர் தெரிவித்தார். இதன் மூலம் சரியான நேரத்தில் தேர்வுகளை நடத்தவும் அதற்கான முடிவுகளை வெளியிடவும் உதவுகின்றது என்பதையும் அவர் தெரிவித்தார்.

சமஸ்கிருதத்தை மேம்படுத்த அதன் கருத்துக்களை தற்போதைய நவீன இயக்கத்துடன் இணைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். "பாரம்பரிய கல்வியை மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், அவர்களுக்குக் கணிதம், அறிவியல் மற்றும் கணினியையும் கற்பிக்கவேண்டும்," என்பதனையும் அவர் குறிப்பிட்டார்.

தேவைப்பட்டால் தனியார் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் நாடும் என்று அவர் தெரிவித்தார். சமஸ்கிருத பள்ளிகளைப் புதுப்பிக்க சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் அவர் தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த அரசு உறுதியாக உள்ளது என்பதனையும் அவர் குறிப்பிட்டார்.


Next Story