Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி அரசால் மீட்கப்பட்ட இலட்சக்கணக்கான கோடிகள் கறுப்புப் பணம் என்ன ஆனது ?

பிரதமர் மோடி அரசால் மீட்கப்பட்ட இலட்சக்கணக்கான கோடிகள் கறுப்புப் பணம் என்ன ஆனது ?

R SubbaiahBy : R Subbaiah

  |  17 Oct 2020 4:13 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி அரசால் மீட்கப்பட்ட கறுப்புப் பணமும், முறைகேடுகளை தவிர்த்ததால் மிச்சமான பணமும் என்ன ஆனது? இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தேங்கி இருக்கும் இந்திய மக்களின் கருப்பு பணத்தை மீட்க, நடவடிக்கைகள் எடுக்க, ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் 2011 லேயே உத்தரவிட்டது.

ஆனால் அந்த உத்தரவை சரிவர செயல்படுத்தாமல் இழுத்தடிப்பு செய்து இன்று நேர்மையாளர்களை போல பேசும் மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் 2014 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போட்டார்கள். ஆனால், திரு நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரதமரான பிறகு எடுத்த முதல் நடவடிக்கை இதுதான்...

முதல் நடவடிக்கையாக ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. இதற்கு பிறகுதான் படிப்படியாக கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் தகவல்களை சேகரிக்க முடிந்தது. பிறகு 2016ல், தாமாக முன்வந்து வரி பாக்கியை செலுத்துங்கள், வெறும் அபராதம் மட்டும் விதித்து விட்டு விடுகிறோம், நாங்களாக பிடித்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரித்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் மோடி.

அதன் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு தாமாக முன்வந்து கருப்பு பணம் தங்களிடம் இருப்பதாக ஒப்புக் கொண்டு வரி கட்டினார்கள் பல செல்வந்தர்கள். அதன் அடிப்படையில் இந்திய அரசுக்கு ரூ. 73 ஆயிரத்து 920 கோடிகள் வரி கிடைத்தது. ஆனாலும், வாய்ப்பு கொடுத்தும் பலர் முன் வரவில்லை. ஆகையால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 2016 ஆம் ஆண்டு இறுதியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பாய்ந்தது. இதனால் வங்கிகளுக்கு வராத பணம் என்னவோ 16,000 கோடிகள் தான். ஆனால் இந்திய மக்கள் அந்த நேரத்தில் அனுபவித்த கஷ்டங்களுக்கு பெரிய லாபம் கிடைக்க துவங்கி உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு செய்யப்பட்ட சோதனைகளால் கிட்டத்தட்ட ரூ.25,000 ஆயிரம் கோடிகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன. அவ்வளவும் புத்தம் புதிய 2000 ரூபாய் தாள்கள். இவை அனைத்தும் வங்கிகளுக்கு செல்லாமல் பிறர் உதவியுடன் மாற்றப்பட்டவை. இந்த வகையில் பிரதமர் மோடியின் முதல் மூன்றாண்டுகளில் மட்டும் ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி வருமானவரித்துறை raid மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது...

மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் , கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கு மேல் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது ஏழைகளின் நிறுவனங்கள் இல்லை. பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் நிறுவனங்கள் அவை அனைத்தையும் தடை செய்ததுடன் அதன் முதலாளிகளை மற்ற நிறுவனங்களுக்கு தலைமை தாங்க தடை செய்தது. இந்த நிறுவனங்கள் மூலம் மட்டும் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ. 37,500 கோடிகள்.... இந்த பணத்தை உரிமை கோரி இதுவரை யாரும் வரவேயில்லை. ஆகையால் ,இந்த பணமும் அப்போது அரசாங்கத்துக்கு சென்றது

இவை தவிர, மேலும் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் கோடிகளுக்கு ஒழுங்காக கணக்கு காண்பிக்கவில்லை. அதற்கான விசாரணை நடந்தது.. கடைசியில் அந்த பணம் இன்னும் மத்திய அரசின் பொறுப்பிலேயே உள்ளது. இந்த வகையில் பிரதமர் மோடியால் ரெய்டுகள் மூலம் மீட்கப்பட்ட கருப்பு பணம் 1,37,000 கோடிகள், மேலும் 16,000 கோடிகள் வங்கிக்கு வராமல் பழைய நோட்டுக்களாகவே அழிந்து போன பணம், தானாக முன்வந்து செலுத்திய கருப்பு பணம் 73,920 கோடிகள், போலி நிறுவனங்கள் மூலம் மட்டும் டெபாசிட் செய்யப்பட தொகை ரூ.37,500 கோடிகள் என மொத்தம் 2,64,020 கோடிகள். இத்துடன் மேலும் 3 லட்சம் கோடிகள் படிப்படியாக வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தவிர, ஆதாருடன் சமையல் எரிவாயு மானியங்களை இணைத்ததில் மிச்சமாகும் தொகை 65 ஆயிரம் கோடிகள் எனக்கூறப்படுகிறது. அடுத்து ரேசன் கடைகள் மூலம் மக்களின் வரிப்பணம் கொள்ளைப்போவதை தடுக்க நடவடிக்கை எடுத்ததில் மட்டுமே ஆண்டுக்கு ஒரு லட்சத்து முப்பத்து எட்டாயிரம் கோடிகள் சேமிக்கப்படுகின்றன.

Make in India மூலம், வெளிநாடுகளிலிருந்து இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் இறக்குமதியை குறைத்து, உள்ளூரில் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தியதன் மூலம் சேமித்த பணம் 1 லட்சம் கோடி, மேலும் நிலக்கரி இறக்குமதியில் வெளிப்படையான ஏல முறைகள் கடைபிடிக்கப்பட்டதால் ஊழல்கள் ஒழிந்தன. இதனால் ஆயிரக்கணக்கான கோடிகள் மிச்சப்படுத்தப்பட்டன. தரமான நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் தரமான மின்சாரம், தரமான் விநியோகம் என்று நாடு செல்கிறது. நாட்டின் எந்த பகுதியிலும் இப்போது மின்வெட்டு முந்தைய ஆட்சிபோல இல்லை.

மின் இணைப்புகள் கேட்டவுடன் கிடைக்கின்றன. இதற்கு மின் தொகுப்பு அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டு மாநிலங்களுக்கு செல்லும் உயர் மின் கோபுரங்கள் செப்பனிடப்பட்டதும், மின் பாதைகள் ஆயிரக்கணக்கான கோடி செலவில் சரி செய்யப்பட்டதும் ஒரு காரணமாகும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

மேலும் மீட்கப்பட்ட பணம் மூலம் தொழில் முதலீடுகள், உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உண்டாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படி செய்ததால்தான் முத்ரா திட்டத்தின் கீழ் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிகிறது. இதுவரை முத்ரா திட்டத்தின் மூலம் 15 கோடி பேர் வரை கடன் பெற்று தொழில் தொடங்கி உள்ளனர்.

மோடி அரசின் முதல் நான்கு ஆண்டுகளில் இதன் மூலம் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை 26 கோடி பேர். இன்னும் பல இடங்களில் புதிய சாலைகள் அமைப்பது, மின்சார வசதி ஏற்படுத்தி தருவது போன்ற விஷயங்களை செய்ய முடிகிறது. இந்த நடவடிக்கைகளால் இந்திய அரசாங்கம் மேலும் கடன் வாங்குவது, ரூபாய் நோட்டடிப்பது குறைந்துள்ளது. இதனால் விலைவாசியும் உயரவில்லை. உணவுப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் விலை கட்டுக்குள்தான் உள்ளது.

காங்கிரஸ் அரசின் கீழ் பல லட்சம் கோடிகள் ஊழல்களைத்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம், இப்பொழுது லட்சக்கணக்கான கோடி மக்கள் பணம் மிச்சமாவதை பார்க்கிறோம். இதன் பலன் இப்போது நமக்கு நன்றாக தெரிந்துள்ளது. கொரோனாவால் நாடு பாதிக்கப்பட்டதும் ஊரடங்கால் அனைத்து உற்பத்தி சேவை தொழில்கள் முடங்கின. இவற்றை மீட்கவும், கொரோனா காலத்தில் நலிவடைந்த மக்களுக்கு தானிய உதவி, நிதி உதவி செய்வதற்காகவும் ஒரே நாளில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு பணம் ஒதுக்கி திட்டங்களை அறிவித்தார்.

அதனால் இப்போது நாடு மீண்டும் மீட்சி அடைந்ததை கண் கூடாக பார்க்கிறோம். இந்த 20 லட்சம் கோடியை எந்த நாட்டிடமும் அரசு கடன் வாங்கவில்லை, கஷ்டநிலை மேலும் தொடர்ந்தால் தேவைப்பட்டால் இதே போல இன்னும் திட்டங்களை அறிவிப்போம் என்கிறார் நிதியமைச்சர். இப்போது தெரிந்து கொள்ளலாம் ஒரு திறமை மிக்க, பொறுப்பு மிக்க, சேவை உணர்வு கொண்ட அரசின் செயல்பாடுகள் இதுதான் என்று..

Next Story