Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண்களின் பாதுகாப்புக்காக "மின்சக்தி திட்டம்" - முதல்வர் ஆதித்யநாத் யோகி.!

பெண்களின் பாதுகாப்புக்காக மின்சக்தி திட்டம் - முதல்வர் ஆதித்யநாத் யோகி.!

Vignesh KBy : Vignesh K

  |  17 Oct 2020 11:30 AM GMT

பெண்களின் பாதுகாப்புக்காக மின்சக்தி திட்டத்தை உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்து அசத்தினார். உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அடிப்படையில் மிஷின் சக்தி என்கிற திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இந்த விழா பலராம்பூரில் நடந்தது.

அந்த விழாவில் பேசிய யோகி ஆதித்யநாத்; அதிர்ஷ்ட மற்ற சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பல்ராம்பூரிலிருந்து "மிஷன் சக்தி பிரச்சாரத்தை" தொடங்குவதாகவும் மற்றும் மிஷன் சக்தி திட்டத்தால் உத்தர் பிரதேசத்தில் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு மற்றும் மரியாதையை உறுதிப்படுத்தும் எண்ணத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேசம் முழுவதும் 1,535 காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளிப்பதற்கான அனைத்து தனி அறைகள் இருக்கும். அதில் ஒரு பெண் காவலர் இருப்பார் .பெண்கள் அளிக்கும் புகாரை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதேபோல பெண்கள் அளிக்கும் புகாரில் தொடர்பு இருக்கும் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை அளிக்கப்படும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பாதுகாப்பை உணர்த்தும் விதமாக தற்காப்பு கலைகள், விழிப்புணர்வு நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Next Story