Top
undefined
Begin typing your search above and press return to search.

செய்தித்தாள் ஊடகங்களை போலவே டிஜிட்டல் மீடியாக்களுக்கும் வசதிகள்: மத்திய அரசு திட்டம்.!

செய்தித்தாள் ஊடகங்களை போலவே டிஜிட்டல் மீடியாக்களுக்கும் வசதிகள்: மத்திய அரசு திட்டம்.!

R SubbaiahBy : R Subbaiah

  |  18 Oct 2020 5:23 AM GMT

காகித வடிவ செய்தித்தாள் ஊடகங்களை போலவே தற்போதைய டிஜிட்டல் ஊடக நிறுவனங்களுக்கும் வசதிகள் மற்றும் நலன்கள் வழங்கப்படும் திட்டம் வகுக்கப்படுவதாக மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அறிவித்துள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை முன்னேற்றும் துறைக்கான அரசு செய்திக் குறிப்பு 4/2019 -ன்படி டிஜிட்டல் ஊடகம் வாயிலாக தற்போதைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை ஒளிபரப்புதல்/ பதிவேற்றம் செய்யும் நிறுவனங்களில் 26% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இப்போது அச்சு/தொலைகாட்சி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் கீழ் கண்ட வசதிகளை விரைவில் விரிவாக்கம் செய்வது என மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. டிஜிட்டல் செய்தி அமைப்புகளின் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், வீடியோகிராபர்கள், முதல் கட்டத் தகவல்களை பெறுவதற்கும் மற்றும் அணுகுதலைப் பெறவும் பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீகாரம் வழங்கப்படும்.

அடுத்து பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கும் நபர்களுக்கான சிஜிஎச்எஸ் பலன்கள் அளிக்கப்படும். மேலும் விரிவாக்கப்படும் நடைமுறைகளுடன் கூடிய ரயில் பயண சலுகையும் அளிக்கப்படும். மேலும் தகவல் தொடர்பு பணியகம் மற்றும் கள அலுவலகத்தின் வாயிலாக டிஜிட்டல் விளம்பரங்களைப் பெறுவதற்கான தகுதி அளிக்கப்படும்,

அத்துடன் அச்சு, மின்னணு ஊடகத்தில் நடைமுறையில் இருக்கும்சுய ஒழுங்கு படுத்தும் அமைப்புகளைப் போல, டிஜிட்டல் ஊடகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நலன்களை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதற்கும் சுய கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும் வகையில் அங்கீகாரம் அளித்தல் போன்ற திட்டங்கள் விரைவில் செயலாக்கம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story