Top
undefined
Begin typing your search above and press return to search.

சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயது.. அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கும்.. பிரதமர் அறிவிப்பு.!

சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயது..  அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கும்.. பிரதமர் அறிவிப்பு.!

BharathiBy : Bharathi

  |  18 Oct 2020 8:35 AM GMT

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி அவர்கள் சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை திருத்துவது குறித்து அரசாங்கம் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று கூறினார்.



மேலும் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், "ரூபாய் 75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிடுவதற்கான காணொலிக் காட்சி மூலம் உரையாற்றியபோது, கடந்த ஆறு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளினால் சிறுமிகளின் கல்வி மற்றும் அவர்களின் கல்வி சேர்க்கை விகிதம் நாட்டின் முதன்முறையாக சிறுவர்களை விட அதிகம் ஆகிவிட்டது" என்று அவர் கூறினார்.



மேலும் அவர் கூறுகையில், "ஸ்வச் பாரத்" திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி மதிப்பிலான கழிப்பறைகளை அரசாங்கம் இலவசமாக கட்டியுள்ளது. அதே போல், ஏழை பெண்களுக்கு ரூ 1 ரூபாயில் சானிட்டரி பேட்களை வழங்குவதையும் மோடி குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து, மகள்களுக்கு திருமணத்தின் சிறந்த வயது எதுவாக இருக்க வேண்டும்? என்பதை தீர்மானிக்க ஒரு முக்கியமான கலந்துரையாடல் நடந்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு தரப்பு பெண்களிடமிருந்து கடிதங்களைப் பெற்று வருவதாகவும், குழுவின் அறிக்கை குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என்றும் பிரதமர் மோடி அவர்கள் கூறினார்.

இதற்கிடையில், '​​திருமணத்திற்கு பெண்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், ஆண்களின் 21 வயது ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது' என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story