Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி கலவரம்: பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி தலைவர் தாஹிர் ஹுசைன் மீது வழக்கு பதிவு.!

டெல்லி கலவரம்: பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி தலைவர் தாஹிர் ஹுசைன் மீது வழக்கு பதிவு.!

JananiBy : Janani

  |  18 Oct 2020 9:26 AM GMT

சனிக்கிழமை அன்று இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் ஹுசைனை அமலாக்கத் துறை(ED) பண மோசடி செய்த வழக்கில் வழக்கு பதிவுசெய்துள்ளது. டெல்லியில் 2020 இல் CAA விற்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டுவதற்காக ஹுசைன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஷெல் நிறுவனங்கள் மூலம் பணம் மோசடி செய்ததைத் தொடர்ந்து ED விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னர், கலவரத்தைத் தூண்டுவதற்காக டிசம்பர் 2019 முதல் பிப்ரவரி 2020 வரை 1.61 கோடியைப் பெற்றதற்காக டெல்லி சிறப்புக் காவல்துறை ஐந்து குற்றவாளிகள் மீது வழக்கு பதிவுசெய்திருந்தது.

ஹுசைனுடன் சேர்ந்து அமித் குப்தாவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அக்டோபர் 19 இல் ஹுசைன் மற்றும் குப்தாவை நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்துள்ளது. தாஹிர் ஹுசைன், பிப்ரவரி 2020 இல் நடைபெற்ற டெல்லி கலவரத்தின் போது புலனாய்வு அதிகாரி அன்கித் சர்மா கொலைசெய்த வழக்கு மற்றும் கலவரத்தில் தொடர்புடையது போன்றவற்றில் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியாவார். மேலும் இவர் சட்டவிரோத நடவடிக்கை எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தாஹிர் ஹுசைன் மற்றும் குப்தா கலவரம் மற்றும் கொலை தொடர்புடைய வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 31 இல் ED, டெல்லியில் CAA விற்கு எதிராகக் கலவரத்தை தொண்டடியதற்காகவும் மற்றும் அந்த கலவரத்திற்காக 1.10 கோடி வரை பணம் மோசடி செய்ததற்காகவும் தாஹிர் ஹுசைனை கைது செய்தது.

தாஹிர் ஹுசைன் அளித்த வாக்குமூலத்தில், அவரும் மற்றும் காலித் சைபி இருவரும் இணைந்து கலவரத்தைத் திட்டமிட்டனர் என்று கூறினார். மேலும் தனது அரசியல் செல்வாக்கை இந்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணியதாக அவர் கூறினார். உச்ச நீதிமன்றம் ராம் லாலா விராஜ்மன்க்கு ஆதரவாகத் தீர்ப்பினை வழங்கியதற்கு மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் கலவரத்தைத் தூண்ட நடத்த இருவரும் இணைந்து செயல்பட்டதாகக் கூறியுள்ளார்.

Next Story