Top
undefined
Begin typing your search above and press return to search.

நெரிசல் மிகுந்த சாலையை அகலப்படுத்த 100 கோவில் வளாக கடைகளை அப்புறப்படுத்த அதிரடி உத்தரவு - யோகி ஆதித்யநாத் அரசுக்கு பொது மக்கள் பாராட்டு.!

நெரிசல் மிகுந்த சாலையை அகலப்படுத்த 100 கோவில் வளாக கடைகளை அப்புறப்படுத்த அதிரடி உத்தரவு - யோகி ஆதித்யநாத் அரசுக்கு பொது மக்கள் பாராட்டு.!

R SubbaiahBy : R Subbaiah

  |  25 May 2020 2:52 AM GMT

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள மிக பிரம்மாண்டமான கோரக்நாத் கோயிலின் மகந்தாகவும் உள்ளார். இந்த நிலையில் யோகி ஆதித்யநாத், நகரத்தில் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்காக கூடுதல் isஇடம் தேவைப்படுவதால் கோயில் வளாகத்தின் ஒரு பகுதியை இடிக்க அரசாங்க அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.

கோரக்நாத் கோயில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை இடிக்கும் புல்டோசர் பணிகளை செய்வதற்கு ஒப்புதல் அளித்து மஹந்த் யோகி ஆதித்யநாத் ஒரு நல்ல முன் உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பல இலட்சம் ரூபாய் கோவிலுக்கு வருமானம் ஈட்டித்தரும் கடைகளை காட்டிலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நலனுக்கான சாலை அமைக்கும் பணிக்கு அவர் முன்னுரிமை அளித்துள்ளதை மாநிலத்தில் அனைவரும் பாராட்டி மகிழ்வதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த மூன்று நாட்களில் 100 க்கும் மேற்பட்ட கடைகள் புல்டோசர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் 17 கி.மீ நீளமுள்ள சாலையை அகலப்படுத்த கோவில் வளாகக் கடைகள் தடையாக இருந்தன என்றும் அதனால்தான் கடைகள் மற்றும் கோவில் கட்டுமானத்தின் ஒரு சிறு பகுதி இடிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார் கடைகளை புல்டோஜ் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே அனுமதி வழங்கியிருந்தார்.

இருப்பினும், சாலை அகலப்படுத்தப்படுவதால் பாதிக்கப்படும் கடைக்காரர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டு அங்கு கடைகள் கட்டப்பட்டு வருவதாகவும் கோவில் அலுவலர்கள் கூறினர்.

https://www.opindia.com/2020/05/uttar-pradesh-yogi-adityanath-100-shops-gorakhnath-temple-demolished-road-widening/

Next Story